அதிமுகவின் தலைமை கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ் வேலுமணிக்கும் டெக்ஸ்மோ குழுமத்தினரின் இல்ல மணப்பெண்ணுக்கும் நிச்சயதார்த்த நிகழ்வு கடந்த ஆண்டு ஆகஸ்டு 23 ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிச்சயதார்த்தத்தில் முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, சி.வி. சண்முகம், செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் வந்திருந்தனர்.கோவை மாவட்டத்தின் அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கும் வேலுமணிக்கும் அதிமுகவில் பிளவு என தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில்… வேலுமணி வீட்டு விசேஷத்துக்கு வராதது அதிமுகவில் விவாதங்களை ஏற்படுத்தியது.அதுவும் நிச்சயதார்த்த விழா நடந்த அன்று சேலத்தில்தான் இருந்திருக்கிறார் எடப்பாடி. சேலத்தில் இருந்து கோவை செல்லாதது ஏன் என்ற கேள்விகளும் எழுந்தது அப்போது கல்யாணத்தில் பங்கேற்பார் என எடப்பாடி தரப்பில் கூறப்பட்டது. .
இந்தநிலையில் எஸ் பி வேலுமணியின் மகன் விஜய் விகாசின் கல்யாணம் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள பிரபல மஹாலில் திருமணம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் எல் முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்ற நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் இன்முகத்துடன் அண்ணாமலையுடன் கைகுலுக்கி நலம் விசாரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த திருமண வைபவத்தில் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டனர். அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அதேநேரத்தில் வேலுமணி இல்ல திருமண விழாவில் எடப்பாடியின் மகன் மிதுன்,வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அனைத்து தேர்தல்களில் தடுமாறி வரும் அதிமுகவின் போக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது. ஜெயலலிதா தலைமையில் கடைசியில் அதிமுக எதிர்கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகள் என்ற வரலாறு காணாத வெற்றியை ருசித்த அதிமுக அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாமல் போயுள்ளது. 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டையே பறிகொடுத்தது.
இந்த நிலையில் அதிமுகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்பொழுது எடப்பாடி பழனிசாமி பக்கம், முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார் , கே, பி முனுசாமி உட்பட ஒரு சிலரை தவிர்த்து அதிமுகவில் இருக்கும் மற்ற அனைவரும் செங்கோட்டைன் பின்னால் இருந்து, எடப்பாடிக்கு எதிரான செங்கோட்டையன் செய்து வரும் புரட்சிக்கு ஆதரவு அளித்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்
இரண்டு வாரம் காத்திருந்து அமித்ஷாவை சந்திக்க முடியாமல் டெல்லியில் இருந்து திரும்பினார் எடப்பாடி மகன்மிதுன் . இந்நிலையில் எடப்பாடி மகன் டெல்லியில் அமித்சாவை சந்திக்க வாய்ப்பு கேட்டு காத்திருந்த அதே காலகட்டத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தார் SP வேலுமணி. மேலும் சமீபத்தில் கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை, வேலுமணி மற்றும் தங்கமணி இருவரும் சந்தித்தது குறிப்பிடதக்கது.
இதற்கிடையே பழனிச்சாமி அல்லக்கைகள் வேலுமணி திருமண விழாவில் அண்ணமாலையுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசிய வீடியோவை போட்டு காண்பித்து வயிற்றெரிச்சலை உண்டு பண்ணியுள்ளார்கள். இனி வேறு வழியில்லை எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவே அடுத்த நகர்வை பார்த்து எடுத்து வையுங்கள் என எடப்பாடியின் மகன் அறிவுரை கூறியுள்ளாராம். அதேபோல் அண்ணாமலையின் வளர்ச்சியை கண்டு அறிவாலயம் தரப்பும் அதிர்ச்சியில் உள்ளதாம் மேலும் அண்ணாமலையுடன் திமுகவினர் தொடர்பில் உள்ளார்களா என விசாரணையில் இறங்கியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















