எஸ் பேங்கை காப்பாற்றியது மோடியா ?

எஸ் பேங்க் திவால் என்றவுடன் மோடி ஆட்சி தான் பேங்க்கை திவாலாக்கி விட்டதாக சிலர் ஒப்பாரி வைக்கிறார்கள்.

இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஏனென்றால் இந்த எஸ் பேங்க் இந்த நிலைக்கு வர கடந்த ஆண்டு ரானா கபூரை ரிசர்வ் வங்கி சிஏஓ பதவியில்
இருந்து தூக்கியதனால் தான் இவ்வளவு சீக்கிரமாக எஸ் பேங்க் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இல்லையென்றால் ரானா கபூரை தேடி அமலாக்கத்துறையும் சிபிஐயும் இங்கிலாந்துக்கு படை எடுத்துக் கொண்டு இருப்பார்கள். விஜய் மல்லையா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தவுடன் மத்திய அரசு அனைத்து வங்கிகளிலும் உள்ள வராக்கடன்களை பற்றி ரிசர்வ் வங்கி மூலமாக அனைத்து வங்கிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி அறிக்கை தாக்கல் செய்யகூறியது.

அப்பொழுது எஸ் பேங்க் அனுப்பிய வராக்கடன் அளவும் ரிசர்வ் பேங்க் கணித்த வராக்கடன் அளவும் ஒத்து போகாததால் சம் திங் ராங் இன் எஸ் பேங்க் என்று ரிசர்வ் பாங்க் ரானா கபூரை விசாரிக்க ஆரம்பிக்க ரானா கபூர் வராக்கடன் மதிப்பை குறைத்து காட்டியது தெரிய வந்தது.

வராக் கடன் விவகாரங்கள் பற்றிய சரியான விவரங்களை எஸ் பேங்க் ரிசர்வ் பேங்குக்கு தெரிவிக்காமல் தவறான மதிப்பை கூறிய ரேகாரணத்திற்காக எஸ் பேங்கின் சிஈஓ வாக 2018 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ரானா கபூ ரின் பதவியை ரிசர்வ் வங்கி ஒரே வருடத்தில் தூக்கி விட்டு ரவ்னீத் கில்லை கடந்த ஆண்டு மார்ச் 1 ம் தேதி கொண்டு வந்ததில் இருந்தே
எஸ் பேங்க் விவகாரத்தில் மத்திய அரசின் நேர்மையை அறிந்துள்ளலாம்.

எஸ் பேங்கில் தான் செய்த பிராடுகளை அறி ந்த மத்திய அரசு தன்னுடைய பதவியை காலிசெய்தவுடன் எஸ் பேங்கில் இருந்த தன்னு டைய ஷேர்களை விற்று விட அதுவரை எஸ் பேங்கின் அடையாளமாக இருந்த அதன் நிறுவனர் ரானா கபூர் எஸ் பேங்கில் நுழைய முடியாது போனது.

பாருங்கள் எஸ் பேங்கைஆரம்பித்து 3 லட்சம் கோடி சொத்துக்கு உயர்த்திய அதன் நிறுவனரையே எஸ் பேங்கில் இருந்து மோடி அரசு தூக்கியது என்றால் வரும் முன் காப்போம் என்று செயல்பட்ட அவர்களின் நேர்மையை புரிந்து கொள்ளுங்கள்.

இதனால் ரானா கபூர் மத்திய அரசு மீது கடுப்பாகி அவருடைய நண்பர்கள் அதாவது காங்கிரஸ் கூட்டம் மூலமாக எஸ் பேங்க் இனி அவ்வளவு தான் என்று செய்திகளை பரப்ப வாடிக்கையாளர்கள் விலக ஆரம்பிக்க பங்கு சந்தையில் ஷேர் மதிப்பு குறைய எஸ் பேங்க் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

அதாவது மக்கள் பணத்தை பெரிய பெரிய தொழில் அதிபர்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு கடன் கொடுத்து விட்டு முழு அளவில் திவாலாக்கி விட்டு.

அதாவது எஸ் பேங்கை விற்று விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி செட்டிலாக இருந்த ரானாகபூரை கடந்த வருடமே வெளியே அனுப்பி சரியான நேரத்தில் செய ல்பட்டு சிரிய அளவி லான இழப்போடு எஸ் பேங்கை காப்பாற்றி அதனை எஸ்பிஐ கைகளில் ஒப்படைத்து இருக்கிறது மோடி அரசு.

உலகமயமாக்கல் உண்டாக்கிய போட்டி பல பொருளாதார கட்டமைப்புகளை உடைத்து வருகிறது. பிஸினஸ் என்கிற ஒரே நோக்கில்
செயல் படும் தனியார் வங்கிகள் ஏதாவது ஒரு வராக்கடனில் சிக்கி விட்டாலே போதும் கதை முடிந்து விடும்.1993 ல் இருந்து இது வரை 13 தனியார் வங்கிகள் திவாலாகி அரசு வங்கிகளோடு இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மோடியா காரணம்?

இந்த எஸ் பேங்கோடு நோக்கமே யார் கடன் கேட்டு வந்தாலும் நோ என்று சொல்லாமல் எஸ் என்று சொல்லி கடன் அளிப்பது தான் ஆனால் மற்ற பேங்கை விட இங்கு வட்டி ஜாஸ்தி .பின்னே இருக்காதா? எல்லா பேங்கும்
நோ சொன்ன பிறகு அவரை கூப்பிட்டு எஸ் வாருங்கள் நாங்கள் தருகிறோம் என்று ஒருவர் கடன் கொடுத்தால் வட்டி எப்படி இருக்கும்?

2004 ம் ஆண்டு ஆரம்பிக்க ப்பட்டு 15 வருட ங்க ளில் ஒரு தனியார் பேங்க் 3 லட்சம் கோடி. சொத்துகளை வைத்து இருக்கிறது என்றால் அவர்களிடம் வட்டி எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

ரானா கபூர் எஸ் பேங்கை ஆரம்பிக்கும் முன் பேங்க் ஆப் அமெரிக்காவில் 16 வருசத்துக்கு மேல் வேலை செய்து பிறகு அவருடைய சகோதரர் அசோக் கபூருடன் இணைந்து 2004ல் ஆக்ஸ்ட் மாதம் மும்பையில் எஸ் பேங்கை ஆரம்பித்தார்.இந்த எஸ் பேங்கை ஆரம்பி க்கும் முன் 1999 ல் ரபோ வங்கியடன்சேர்ந்து ரபோ இந்தியா பைனான்ஸ் நிறுவனத்தை ரானா கபூர் & அசோக் கபூர் துவக்கி நிதித்துறையில் காலடி எடுத்து வைத்தனர்.

2008 ல் மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் அசோக் கபூர் காலியாக எஸ் பேங்கின் ஒன்லி ஒன் எம்டியாக ரானா கபூர்
வந்த பிறகு தான் எஸ் பேங்க் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.

அசோக் கபூர் காலியான 10 வருசத்தில் 3 லட்சம் கோடி சொத்துகளை
உடைய பேங்காக எஸ் பேங்க் உயர ரானா கபூர் மட்டுமே காரணம்.

எஸ் பேங்கில் அதிக வட்டி என்றாலும் கடன் ஈசி என்பதால் பெரிய நிறுவனங்கள் எஸ் பேங்கில் பெரியளவில் கடன் வாங்க ஆரம்பி
த்தன.அதனால் வராக்கடன் அதிகரிக்க ஆரம்பித்தது.ஐ.எல் & எஃப்.எஸ், டி.ஹெச்.எஃ ப்.எல், ஜெட் ஏர்வேஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், கஃபே காபி டே என்று ஏகப்பட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளில் கடன் வைத்து இருக்கிறார்கள்.

எஸ் பேங்கில் வராக்கடன் ஒன்றும் பெரிய விசயமல்ல சுமார் 3 லட்சம் கோடி சொத்து மதிப்பு இருக்கிறது .பேங்கை ஸ்டேட் பாங்க் எடுத்து நடத்த இருக்கிறது. எஸ் பேங்கின் ஷேர்களை எல்ஐசி நிறுவனமும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் வாங்கி வருவதால் மக்களின் டெபாசிட்களுக்கு எந்தபயமும் தேவையில்லை.

ஒரு வாடிக்கையாளரின் டெபாசிட் தொகை க்கு ஒரு வங்கி எப்படி வட்டி கொடுக்க முடியும்? பல தொழில் செய்பவர்களுக்கு அதிக வட்டியுடன் கடன் அளித்து கிடைக்கும் பணத்தை வைத்து தான் அளிக்க முடியும். இதனால்
வங்கிகள் கடன் கொடுக்காமலும் இருக்க முடியாது.

இதில் அரசியல் தலையீடுகளினால் அளிக்கப்படும் கடன்கள் தான் வராக்கடன்களாகமாறி விடுகின்றன. இந்தியா வில் 2008 வரை வங்கிகளின் மூலமாக அளிக்கப்பட்ட கடன்களின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா?
18 லட்சம் கோடி ரூபாய் தான்.

ஆனால் 2008 ல் இருந்து 2014 மோடி ஆட்சி ஏற்படும் வரை நடைபெற்ற 6 ஆண்டு காலகாங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப் பட்ட கடன் எவ்வளவு தெரியுமா? 34 லட்சம் கோடி ரூபாய் மலைப்பாக இருக்கிறது அல்லவா.இன்றைக்கு வங்கிகளின் வராக்கடன் உயர்ந்து நிற்க காரணமே காங்கிரஸ் ஆட்சி தான் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்
ராஜன் கூறி இருக்கிறார்.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து 60 வருசமாகவங்கிகள் அளித்த கடன் மதிப்பு 18 லட்சம் கோடி ரூபாய்.ஆனால்6 வருசத்தில் டபுள் மடங்காக 34 லட்சம் கோடி ரூபாயை கடனாக அளித்து வங்கிகளை காலி செய்த காங்கிரஸ் திருட்டு நாய்கள் ரிசர்வ் பேங்க்குக்கு அளித்த கடனை குறைத்து காட்டிய எஸ் பேங்க் நிறுவ னரையே வங்கியின் சிஏஓபதவியில் இருந்து தூக்கி வீசிய மோடி அரசை குற்றம் கூற என்ன தகுதி இருக்கிறது?

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version