ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரேதேச மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு பாஜ., அரசு ஆட்சி அமைக்க வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் மக்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி கிடைக்க பாஜ., வின் மகத்தான வெற்றி தேவைப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ராம நவமி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
பாஜ., ஆட்சியில் மக்கள் ராமநவமியை கொண்டாட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். 55 ஆண்டுகளில் காங்கிரசால் சாதிக்க முடியாததை, பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் சாதித்து காட்டினார். கடந்த 9 ஆண்டுகளில், 12 கோடி ஏழைகளுக்கு கழிப்பறை, 4 கோடி பேருக்கு வீடு, 4 கோடி மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு உத்தரப்பிரேதேச மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















