உத்திர பிரேதேசத்தில் யோகி யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! பிரமாண்ட வெற்றிக்கு குறி வைத்த யோகி ஆத்யநாத்!

மத்திய அமைச்சரவை மாற்றம் முடிந்து பரபரப்புகள் ஓய்ந்துள்ள நிலையில் இப்பொழுது உத்தரபிரதேச அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்புகள் ஆரம்பமாகிவிட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் உத்தர பிரதேச மாநில சட்டம ன்ற தேர்தலை முன்வைத்து யோகி த லைமையிலான அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பி ஜேபிக்கு வந்த ஜிதின் பிரசாத் மற்றும்
பிஜேபி கூட்டணியில் உள்ள நிஷாத் பார்ட்டியின் தலைவர் சஞ்சய் நிஷாத் இருவரும் முக்கியமானவர்கள் .
.
வருகின்ற உத்தபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு இரண்டு கட்சிகளிடை யே தான் கூட்டணி இருக்க முடியும் என்று தெரிகிறது ஒன்று அப்னா தளம் (சோனா லால்) இன்னொன்று நிஷாத் பார்ட்டி அப்னா தளம் உத்தர பிரதேசத்தில் யாத வர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் குர்மி இன மக்களுக்காக உருவான கட்சி உத்தரபிரதேசத்தில் சுமார் 15 சதவீதம் உள்ள யாதவர்களுக்கு அடுத்து ஓபிசி பிரிவில் சுமார் 9 சதவீதம் அளவில் குர்மி க்கள் இருக்கிறார்கள். காலம் காலமாகவே குர்மிக்களுக்கும் யாதவர்களுக்கும் ஆகாது என்பதால் குர்மிக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு எதிரான அரசியலையே முன்னெடுத்து வருகிறார்கள்.

கன்ஷிராமுடன் இணைந்து அப்னா தளததின் நிறுவனர் சோனாலால் படேல் பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கி தலித் குர்மி என்கிற சாதி கணக்கை வைத்துபகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தார். கன்ஷிராம் மறைவிற்கு பிறகு மாயாவதிக்கு முன்னாள் தாக்கு பிடிக்க முடியாமல் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய சோனாலால் படேல் அப்னா தளம் என்கிற கட்சியை உருவாக்கி குர்மி இன மக் களிடையே அரசியல் எழுச்சியை உருவாக்கினார்.ஆனால் அந்தோ பரிதாபமாக சோனாலா ல் படேல் ஒரு சாலை விபத்தில்மரணமடைய அவருடைய மகள் அனுப்பிரியா படேலும் மனைவி கிருஷ்ணா படேலும் அரசியலுக்கு வந்து பிறகு அவர்களுக்குள் அடித்துக் கொண்டு அப்னா தளத்தை இரண்டாக பிரித்து கொண்டார்கள்.

சோனாலாலின் மகள் அனுப்பிரியா படே லின் அப்னா தளம் பிஜேபி கூட்டணியில் இருக்கிறது.அனுப்பிரியா படேலின் தாய் கிருஷ்ணா படேலின் அப்னா தளம் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. குர்மிக்களின் ஆதரவு அனுப்பிரியா படேலுக்கு இருப்பதால் தான் உத்தர பிரதேச தேர்த லை முன் வைத்து அவரை இப்பொழுது
மத்திய அமைச்சராக்கி இருக்கிறார்கள் பிஜேபியின் இன்னொரு கூட்டணி கட்சி யான நிஷாத் பார்ட்டியின் தலைவரான சஞ்சய் நிஷாத் யோகி அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். சஞ்சய் நிஷாத்தும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி தான் நிஷாத் பார்ட்டியை உருவாக்கினார்.

நிசாத் பார்ட்டி.(நிர்பல் இந்தியன் சோஷி த் ஹமாரா ஆம் தளம்). பெயரே வித்தியா சமா இருக்கிறதல்லவா இந்த நிஷாத் பா ர்ட்டியும் ஒரு சாதிக்கட்சிதான், ராமாயண த்தில் ராமபிரான் காட்டுக்கு போகும் பொ ழுது கங்கையை கடக்க அவரையும் சீதா தேவி லஷ்மணனை படகில் அழைத்து சென்று விடுவாரே குகன்.அவர் வழியில் வந்தவங்க தான் இந்த நி ஷாத் மக்கள்.இன்றைக்கும் கங்கையில் படகு இயக்கி கொண்டிருப்பவர்கள் இந்த நிசாத் மக்கள் தான்.காலம் காலமாக காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த நிஷாத்கள் காலப்போக்கில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளாகி விட்டார்கள்.

ஆனால் நிஷாத்கள் தொடர்ந்து பிஜேபி எதிர்ப்பு நிலையிலேயே இருந்து வந்தார்கள்.கோரக்பூரின் லோக்சபா எம்பியாக தொடர்ந்து 5 முறை வென்ற யோகி ஆதி த்ய நாத் 2017 ல் உத்தரபிரதேச முதல்வ ராகிய பிறகு நடைபெற்ற கோராக்பூர் இடைத்தேர்தலில் பிஜேபி தோற்று போனது அல்லவா. யோகியின் கோட்டையான கோரக்பூரில் 2018 ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பிஜேபியை தோற்கடித்தவர் சஞ்சய் நி ஷாத்தின் மகன் பிரவின் நிஷாத் தான்.

இதற்கு பிறகு தான் யோகிக்கு அரசியல் புரிய ஆரம்பித்தது.அதனால் தான் இப்பொழுது சஞ்சய் நி ஷாத் பிஜேபி கூட்டணியிலும் அவருடைய மகன் பிரவின் நிஷாத் பிஜேபி எம்பியாகவும இருக்கிறார்கள்.நிஷாத்களும் ராமாயணத்தில் ராமருக்கு துணை நின்ற குகன் மாதிரி இனி வருகின்ற காலத்தில் பிஜேபிக்கு துணை நிற்பார்கள். கடந்த 2017 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணியின் வெற்றிக்கு துணையாக இருந்த சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி இப்பொழுது கூட்டணியில் இல்லை என்றாலும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் ஆதரவு தளமாக இருந்தத பாசி இன தலித் மக்கள் இப்பொழுது பிஜேபி ஆதரவாளர்களாகி விட்டார்கள் ஒரு காலத்தில் மாயாவதியின் பின்னால் நின்ற பாசி இன தலித் மக்கள் இன்று பிஜேபி பின்னால் நிற்க முக்கிய காரண ம் எஸ்பிஎஸ்பி தான்.

சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி.இந்த கட்சி பகுஜன்சாமாஜ் கட்சியில் இருந்து பிரிந்த ஓம் பிரகாஷ் ராஜ்பார் தலைமையில் உருவாகி பிஜேபியுடன் கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தது இதனால் தான் 2017 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைத்தது.
சுகல்தேவ் பாரதிய சமாஜ் பார்ட்டி என்பது மன்னன் சுகல்தேவ் இவர் ஒரு தலித் மன்னர்

உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியில் சிராவஸ்தி என்கிற நாட்டை 11ம் நூற்றா ண்டில் ஆண்ட மன்னர். அந்த காலத்தில் இந்தியாவுக்குள் நுழை ந்த கஜினிமுகம்மது கூட்டத்தையே ஓட ஓட விரட்டியவர்.கஜினி முகம்மதுவின் மச்சான் சையத் சாலர் என்பவரை போ ட்டு தள்ளியவர் இந்த சுகல்தேவ் மன்னர் வழியில் வந்த தலித் மக்கள் தான் பாசி இன தலித் மக்கள்.

உத்தர பிரதேச மக்கள் தொகையில் 21% தலித் மக்கள்இருக்கிறார்கள்.இதில் 57% ஜாடவ் என்கிற தலித் மக்கள்இருக்கிறார்கள் .இவர்கள் தான் பகுஜன்சமாஜ்வாதி கட்சியின் நிரந்தர ஓட்டு வங்கி.ஏனென் றால் மாயாவதி ஒரு ஜாடவ் தலித் லீடர் ஜாடவ்களுக்கு அடுத்து சுமார் 20% பாசிக் கள் இருக்கிறார்கள். இந்த பாசிக்கள் பிஜேபி ஆதரவு நிலைக்கு வந்ததால் தான் பிஜேபி உத்தரபிரதேசத்தில் படு ஸ்ட்ராங்காகி விட்டது.ஆனால் வருகின்ற சட்ட ம ன்ற தேர்தலில் சுகல்தேவ் சமாஜ் பார்ட்டி அசாதுதீன் உவைசியுடன் கூட்டணி வைத்து போட்டியிட இருக்கிறது.

இதனால் பிஜேபிக்கு தலித் வாக்குகள் குறைந்தாலும் அதனை நிவர்த்தி செய்ய மீனவ இனமான நிஷாத்களின் தலைவ ரான சஞ்சய் நிஷாத்துக்கு அமைச்சர் பதவி அளித்து 2017 மாதிரியே ஒரு மிகப்பெரிய வெற்றியை நோக்கி பிஜேபியை கொண்டு செல்கிறார்கள்.

Exit mobile version