நீ தான் எதற்கும் துணிந்தவன் ஆச்சே…. திருமா,ஸ்டாலின் பின்னால் ஏன் ஒளிந்து கொள்கிறாய்! நீதியின் குரல் பாஸ்கரன்!

ஜெய் பீம் பிரச்சனை சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை ஓயாது என்ற நிலைக்கு சென்றுவிட்டது. இது வன்னிய சமுதாயத்தினர் இதனை விடுவதாக இல்லை. திட்டமிட்டு வன்னியர் மக்களை தவறாக சித்தரித்துள்ளார்கள். என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதற்கு சமுதாய மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஜெய் பீம் எதிராக போர்க்கொடி துக்கியுள்ளார்கள்.

இந்த நிலையில் நீதியின் குரல் பாஸ்கரன் சூர்யாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு திமிர்த்தனமாக பதில் சொல்லும் நீ (சூர்யா) முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பின்னால் ஒளிவது ஏன், இப்படி மாற்று வேலைகளை செய்யும் நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வாருங்கள், வெளிப்படையாக இதுதான் என் கருத்து, கொள்கை என்று சொல். என நீதியின் குரல் பாஸ்கரன் விமர்சித்துள்ளார்.

நீதியின் குரல் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான பாஸ்கரன், வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இருளர் சமுதாயத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் சமுதாயம் வன்னியர் சமுதாயமும், பாட்டாளி மக்கள் கட்சியும்தான். ஆனால் அது அனைத்தையும் ஜெய்பீம் படத்தில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பாமகவின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறார் சூர்யா.

அன்புமணி ராமதாஸ் எழுப்பிய 9 கேள்விகளுக்கு நேர்மையாக பதில் கூறாமல், தன்னுடைய ஆணவத்தை, திமிர்தனத்தை காட்டும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது சார்ந்து அவர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். போதாத குறைக்கு திருமாவளவனுக்கும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். பாமக விவகாரம் என்றாலே விடுதலைச் சிறுத்தைகளுக்கு வெள்ளம் தின்பது போலத்தான்.

இதோ நாங்கள் இருக்கிறோம் என்று திருமாவளவன் அவர்கள் தனது திருவாய் மலர்ந்து சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். பாமக ஏதோ சூர்யாவை மிரட்டுவது போன்றும், விடுதலை சிறுத்தைகள் சூர்யாவை காப்பது போன்றும் நடந்துகொள்கிறார்கள். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை கூட அவர் சொந்தமாக எழுதியதாக தெரியவில்லை, யாரோ எழுதிக் கொடுத்ததில் அவர் கையெழுத்து போட்டுள்ளார்.பரவாயில்லை, சூர்யாவை நடிக்க கூடாது என்றெல்லாம் பாமக சொல்லவில்லை, அவர் திமிர்த்தனமாக பதில் சொல்லும் போது தான் கோபம் வருகிறது.

சூர்யா அவர்களுக்கு யாரோ தவறாக ஆலோசனை வழங்குகிறார்கள். அதையெல்லாம் ஏன் அவர் கேட்டுப் பெறுகிறார் என்று தெரியவில்லை. இப்பொழுது திருமாவளவனை துணைக்கு அழைத்து வருகிறார். திருமாவளவனுடைய சரக்கு மிடுக்கு பேச்சு எந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டது என்று எல்லோர்க்கும் தெரியும், சூர்யா சார்ந்திருக்கும் கவுண்டர் சமுதாய மக்களே எத்தனை பேர் அவரை கண்டித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த திருமாவளவன் இப்போது சீறிப் பாய்கிறார். பாமக ஏதோ உன்னை மிரட்டுவது போலவும் அவர் பாமகவினரை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுக்கிறார். இதெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்கிற ஒரு கதை. அன்புமணி ராமதாஸ் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு திமிர்த்தனமாக பதில் சொல்லும் நீ (சூர்யா) முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பின்னால் ஒளிவது ஏன், இப்படி மாற்று வேலைகளை செய்யும் நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வாருங்கள், வெளிப்படையாக இதுதான் என் கருத்து, கொள்கை என்று சொல்.

ஆனால் இன்று திருமாவளவனை ஏன் துணைக்கு அழைத்து வருகிறாய், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட பன்மடங்கு அம்பேத்கரை நேசித்தது, அம்பேத்கருக்கு சிலைகளை வார்த்தது. அம்பேத்கர் கொள்கைகளை பரப்பியது பாமக என்பதை திருமாவளவன் ஏற்றுக்கொள்வார்.

சூர்யாவும் சூர்யாவின் குடும்பமும் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளும், அது நெகிழ்வுத் தன்மை உடைய குடும்பம் , கலைஞர் கருணாநிதி ஏற்றுக்கொள்ளும், அம்மையார் ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொள்ளும், திருமாவளவனை ஏற்றுக்கொள்ளும், ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும் வேண்டுமென்றால் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அது நாளைக்கே பாமகவையும் ஏற்றுக் கொள்ளும். மொத்தத்தில் சூர்யா குடும்பத்திற்கு எந்த கொள்கையும் கிடையாது. நீங்கள் பெரிய கொள்கை வாதிகள் போன்று கூப்பாடு போட வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

Exit mobile version