திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது ஏன் ?

பட்டியல் இனத்தவர் குறித்த பேச்சு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது.

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என ஆர்.எஸ். பாரதி கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பேசினார். பின்னர் அது குறித்து விளக்கமளித்து செய்தியாளர்கள் மூலம் வருத்தம் தெரிவித்திருந்தார். 

கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்!

பட்டியல் இனத்தவர் குறித்த பேச்சு தொடர்பாக இன்று காலை நங்கநல்லூர் இல்லத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ். பாரதி, 100 நாட்களுக்கு முன்பு பேசிய விவகாரத்திற்கு இன்று கைது செய்யப்படுவதாகவும், இது ஆளும் கட்சியினரின் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் குறிப்பிட்டார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்!

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version