1000 ஆண்டு பழைமையான சொர்ணபுரீசுவரர் ஆலயம் முன் ஜெபகூட்டம் நடத்தி அட்டூழியம் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா ?

சீர்காழி அருகே
கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை அகற்றக்கோரி காவல் நிலையத்தில் புகார் .

சீர்காழி அருகில் காத்திருப்பில் உள்ள கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை அகற்றக்கோரி கோயில் அர்ச்சகர் கே.ஆர்.சந்திரசேகர சிவாச்சார்யார், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பண்டரிநாதன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செம்பனார் கோயில் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 73, காத்திருப்பு சிவன் தெற்கு வீதியில் அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால திருக்கோயில் இதுவாகும். ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடைபெறுவதுடன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வந்து தரிசித்து செல்வது வழக்கம்.

தினந்தோறும் ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இத்திருக்கோயிலிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் தென் பாதி தெருவில் “அக்னி ஜூவாலை ” என்ற கிறிஸ்தவ ஜெபக் கூடம், செயல்பட்டு வருகிறது.ஒரு கிறிஸ்தவர் கூட வசிக்காத இப்பகுதியில் அப்பாவி இந்துக்களை மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் இந்த கிறிஸ்தவ ஜெபக்கூடம் இயங்கி வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளுடன் வெளியூர்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து ஜெபம் செய்கிறோம் என்ற போர்வையில் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இதனால் இந்துக்கள் மட்டுமே வசிக்கும் இப்பகுதி வாழ் அப்பாவி மக்களின் அமைதியான வாழ்க்கை முறை கேள்விக் குறியாகியுள்ளது. மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் செயல்படும் இந்த கிறிஸ்தவ ஜெபக் கூடத்தினால் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

இதனால் வருங்காலங்களில் மத ரீதியிலான மோதல்கள் உருவாக வாய்ப்புகளுள் ளது. பழமையான சிவாலயத்தின் வழிபாடுகளுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே கிறிஸ்தவ ஜெபக்கூடத்தின் செயல்பாடுகள் உள்ளன.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட நீதியரசர் வேணுகோபால் அவர்கள் தலைமையிலான கமிஷன் “ஒரு வழிபாட்டுத் தலத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் வேற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலம் அமையக் கூடாது” எனக் கூறியுள்ளது.

கிறிஸ்தவர்களே இல்லாத இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் திருக்கோயில் பூஜைகளுக்கு இடையூறு செய்யும் விதமாகவும், அப்பாவி மக்களுக்கு ஆசை காட்டி மோசடியாக மதமாற்றம் செய்யும் தீய எண்ணத்துடனும் செயல்பட்டு வரும் மேற்படி “அக்னி ஜூவாலை ” என்னும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை இப்பகுதியிலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்திட வேண்டுமென கிராமவாசிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Exit mobile version