சீனாவில் 3 வருடத்தில் 16,000 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளது! வெளிவந்த ஆய்வு அறிக்கை! இஸ்லாமியர்களின் புனித தலம் 30% அழிக்கப்பட்டுள்ளது!

சீனாவில் தொடர்ந்து உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்தடை அவர்களை ஒடுக்குவது என பல அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது சீன அரசு. மேலும் அவர்கள் வழிபட்டுத்தலங்களை இடித்து வருகிறது. கட்டாய மதமாற்றம் செய்யபடுகிறது. இந்த நிலையில் ஒரு ஆய்வு அறிக்கையின் படி சின்ஜியாங் மாகாணத்தில் மட்டுமே 16,000 மசூதிகளை சீன அரசு இடித்து தள்ளியுள்ளது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் இது ஆஸ்திரேலியாவை மையமாக கொண்ட ஆய்வு நிறுவனம்.இந்த அமைப்பானது சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் புள்ளிவிவரங்களை கொண்டு ஆய்வை மேற்கொண்டது.

ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த ஆய்வின் படி சின்ஜியாங் மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 8500 மசூதிகள்தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. மசூதிகள் இருந்த இடம் தற்போது காலியான இடமாக செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றது. 28% மசூதிகள் பாதி இடிந்த நிலையில் பலத்த சேதமடைந்த நிலையில் காட்டுகிறது. பல மசூதிகள் அதன் சீனாவின் கட்டிடக்கலைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் சாலைகள் அதற்கான வழிகள் இஸ்லாமியர்களின் கல்லறைகள் சின்ஜியாங் மாகாணத்தில் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது 30% ‘முக்கியமான இஸ்லாமிய தளங்கள்’ சிஞ்சியாங்கில் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளன. என இந்த ஆஸ்திரேலிய ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

ஆனால் சீனாவோ 24,000 க்கும் மேற்பட்ட மசூதிகள் இருக்கிறது என கூறி வருகிறது. முஸ்லிம்கள் அதிகம் வாழும் சிஞ்சியாங் மாகாணத்தில் 15,500 க்கும் குறைவான வழிபாட்டு தளங்கள் உள்ளது என இந்த அமைப்பு கூறுகிறது. இதில் முக்கியமானது . 2012-2016 வரையில் சீனாவில் பல மசூதிகள் புரனமைக்கப்பட்டது, ஆனால் அதற்கடுத்து மசூதிகளை அழிப்பதில் சீன அரசு கவனம் செலுத்துவது புரியாத புதிர் என்கின்றது ஆய்வு நிறுவனம்.

சின்ஜியாங் முழுவதும் முஸ்லிம்களின் கட்டிடக்கலை மற்றும் அவர்களின் சின்னங்கள் மாற்றப்பட்டுள்ளது . முஸ்லிமகளின் கலாச்சார அழிவு சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சின்ஜியாங்கில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, இந்த அமைப்பு அந்த மாகாணத்தின் மசூதிகளை வகைப்படுத்தினர். சேதமடையாத, சற்று சேதமடைந்த, கணிசமாக சேதமடைந்த, அழிக்கப்பட்ட மசூதிகள் என அவர்கள் வகைப்படுத்தினர்.

இஸலாமியர்களின் புனித தளங்களில் 30% இடிக்கப்பட்டுள்ளன. 27.8% சேதப்படுத்தப்பட்டுள்ளது . மொத்தத்தில், சீன சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட 17.4% இஸ்லாமிய தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 61.8% பாதுகாப்பற்ற தளங்கள் சேதமடைந்துள்ளன. எனும் அதிர்ச்சி காரமான செய்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவின் மாநில கவுன்சில் தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு வெள்ளை அறிக்கையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறுகையில், (CCP) சீனா , உய்குர் முஸ்லிம்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு உய்குர் முஸ்லிம்களே பொறுப்பு என அறிக்கை விட்டுள்ளது.

உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாகாணமான ஜின்ஜியாங்கில் 2014 முதல் 2019 வரை 1.29 மில்லியனுக்கும் அதிகமான மக்களை முகாம்களில் அடைத்துள்ளதாக சீனா அரசு தெரிவித்துள்ளது. உய்குர் முஸ்லிம்கள் ‘பயங்கரவாதிகள்’ என்றும் ‘மறு வாழ்வு’ மீது நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் மத பிடிவாதம் காரணமாக நவீன அறிவியலை நிராகரித்தனர் என்று அந்த வெள்ளை அறிக்கை கூறியது.

Exit mobile version