2024 மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி தான் நெற்றிப்பொட்டில் அடித்து சொன்ன உத்திர பிரதேச மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்!

அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். உத்திர பிரேதசம். 23 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலம் ஆகும். மினி இந்தியா என்றே அழைக்கலாம். உத்திர பிரேதச தேர்தல்கள் தான் இந்தியாவின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை கொண்டது. தற்போது அங்கு பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. யோகி ஆத்யநாத் முதல்வராக உள்ளார். இவரின் அதிரடி நடவடிக்கைகள் இந்திய மக்களுக்கு பிடித்திருக்கிறோதோ இல்லையோ அம்மாநில மக்களுக்கு பிடித்துவிட்டது போல..

தற்போது உத்திரபிரேதசத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் மொத்தம் உள்ள 75 இடங்களில் 67இடங்களில் பிஜேபி வெற்றி பெற்று இருக்கிறது.தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ரேபரேலி அமேதி மாவட்ட பஞ்சாயத்து களை பிஜேபி கைப்பற்றி இருக்கிறது.முலாயம் சிங் யாதவின் பிறந்த மண்ணான மெயின்புரியில் பிஜேபி முதல் முறையாக வெற்றி பெற்று இருக்கிறது.

இதை விட போலி விவசாயி ராகேஷ் தி காயத் நிறுத்திய வேட்பாளர் முசாபர்நகரில் பிஜேபிடம் மண்ணை கவ்வி இருக்கிறார்.இந்திரா காந்தியின் அரசியல் வாரிசு பிரி யங்கா வத்ராவின் காங்கிரஸ் கட்சிக்குமரண அடி கிடைத்து இருக்கிறது. இன்னும் 6 மாதங்களில் தேர்தலை எதிர்கொள்ள உள்ள உத்தர பிரதேசத்தில் பிஜேபிக்கு உள்ளாட்சி தேர்தலில் கிடை த்துள்ள இந்த வெற்றி மிகப்பெரிய வெற்றியாகும்.

எதிர்க்கட்சி சோனியா முலாயம் போன்றவர்கள் சொந்த லோக்சபா தொகுதியிலேயே, அவர்களுடைய கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளது, அக் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் ரேபரேலி மற்றும் அமேதியில், பா.ஜ., முதல் முறையாக வென்றுள்ளது.ரேபரேலியில் முன்னாள் மேலவை உறுப்பினரான தினேஷ் சிங், காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.

2017 சட்டசபை தேர்தலில் 324 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்று அசத்தியது. கடந்த தேர்தலை ஒப்பிட்டால் இது 277 தொகுதிகள் அதிகமாகும். இதில் இரு குட்டி கூட்டணி கட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், பாஜக மட்டும் 311 தொகுதிகளை வென்றுள்ளது. அனைவரும் இதை உபி யின் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் தான் இந்த பஞ்சாயத்து தேர்தல் வெற்றி என்கிறார்கள். ஆனால் அதில் பாதியளவு உண்மை மட்டுமே இது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் உத்திர பிரேதேசம் பஞ்சாயத்து தேர்தல் வெற்றி ஆகும்.

கடந்த மக்களவைத் தேர்தலிலும்கூட, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு, உத்தரப் பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற 71 தொகுதிகளே அடித்தளமாக அமைந்தன. மேலும் தற்போதைய மாவட்ட பஞ்சாயத்து வெற்றி உத்திர பிரதேச மாநில சட்டப்பேரவையில் ஒலிப்பது நிச்சயம். பாஜக மீண்டும் ஆட்சியை அங்கு தக்க வைத்தால், பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் 70 தொகுதிகளை கைப்பற்றுவது மிக எளிது பாஜகவிற்கு. தற்போதைய மக்களவைத் தேர்தலில் உத்திர பிரேதசத்தில் அக்கட்சி பெறக்கூடிய இடங்கள்தான், மீண்டும் அரியாசனம் ஏறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.

வரும் சட்டசபை தேர்தலில் பாஜக உத்திர பிரேதசத்தில் பெறப்போகும் வெற்றி இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களிடையே பாஜகவின் மீதுள்ள தவறான கண்ணோட்டத்தை குறைக்கும். ஏனென்றால் உத்திர பிரேதசத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வதில் இஸ்லாமியர்க்ளுக்கு தனி பங்குண்டு.

Exit mobile version