2024 மீண்டும் மோடி தான் பிரதமர்.. இந்தியா டுடே- சி ஓட்டர்ஸ் ,‛‛மூட் ஆப் தி நேசன்…தேசிய ஊடகங்கள் கருத்து கணிப்பு!

Mood of the Nation

Mood of the Nation

2024 நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தற்போதே கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், அதற்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியும் தயாராகி வருகின்றன. நாடளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. இதனிடையே 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அடுத்து யார் பிரதமராக வருவார் என்ற எதிர்ப்பு உள்ள நிலையில் , பிரதமர் மோடி மீண்டும் 3-வது முறையாக மோடி பிரதமராக 52 சதவீதம் வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் யார் பிரதமராவர் என்பது குறித்து இந்தியா டுடே- சி ஓட்டர்ஸ் , ‛‛மூட் ஆப் தி நேசன்’.இணைந்து கடந்த ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரையில் மாபெரும் கருத்து கணிப்பு நாடுமுழுவதும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கருத்து கணிப்புகளின் முடிவு வெளியாகியுள்ளது. இதில் வரும் 2024 நாடளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தான் வருவார் என 52 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். பாராளுமன்றத்திற்கு இன்று தே்ரதல் நடந்தால் பா.ஜ. க 306இடங்களில் வெற்றிபெறும்.பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் ஆட்சியின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக 63 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

அதுதவிர ஏன் பா.ஜ.க விற்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஆய்வில் பிரதமர் மோடிக்காக 44 சதவீதம் பேரும், வளர்ச்சிக்காக 22 சதவீதம் பேரும், ஹிந்துத்துவாவிற்காக 14 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

சென்ற வாரம் அடுத்து யார் பிரதமராக வருவார் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என ஆங்கில டி.வி. செய்தி சேனலான டைம்ஸ்நவ், இ.டி.ஜி., கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 296 லிருந்து 326 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகள் இணைந்து எதிர்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணிக்கு 160 முதல் 190 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

தேசிய அளவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் 3வது முறையாக பிரதமர் மோடி அவர்கள் அவர்கள் தான் மீண்டும் பிரதமராவர் என கூறிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version