கடந்த வாரம் மோடி அரசின் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் பல அதிரடி மாற்றங்கள் மற்றும் விரிவாக்கம் செய்யபட்டது. மாற்றி அமைக்கப்பட்ட புதிய மத்திய அமைச்சரவையில், கூட்டுறவு துறைக்கு என, தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதனை நிர்வகிக்கும் பொறுப்பு, உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.அவர் இன்னும் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டுறவுக்கு எதற்கு தனி அமைச்சகம் என கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் சில
மாநில கட்சிகள்
முக்கியமாக சரத் பவர் மிகவும் கொக்கரித்தார். அது ஏன் என்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது மஹாராஷ்டிராவில் மட்டும் கூட்டுறவு வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ.25 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. மத்திய அரசு ஏன் கூட்டுறவு சங்கத்திற்கு தனி அமைச்சகம் உருவாக்கி உள்ளது என்பது தற்போது தெளிவாகி உள்ளது. அதற்கு ஏன் அமித் ஷா வை நியமித்தது எனவும் தற்போது தெளிவாக தெரிகிறது.ஒரு மாநிலத்தில் 25 ஆயிரம் கோடி மோசடி என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதோ.
மத்திய அரசின் வண்டி சரியாத்தான் போய்க்கிட்டிருக்கிறது என்பது இந்த புதிய அமைச்சகத்தின் உருவாக்கமும், அமித் ஷா அதன் அமைச்சர் பொறுப்பேற்றதும் உறுதி செய்கிறது. அதோடு… பவார் தொடர்புடைய கோஆப்பரேட்டிவ் ஊழலும் பெரிய தொகை!
சிவசேனா தாக்கரேயும், தேசியவாத காங்கிரஸ் பவாரும் தனித்தனியே பாஜக தலைவர்களை (மோதி – ஷா) சந்தித்து “கூட்டணி” பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். “உங்கள் கூட்டணியே தொடரட்டும்” என்று கூறிவிட்டார்களாம். பாஜக “அவர்கள் (காங் – சேனா – பவார்) கூட்டணியில் நாளுக்கு நாள் கருத்து வேறுபாடுகளும், ஒருவரை ஒருவர் எதிர்த்து அறிக்கைகளும், மோதல்களும், ஊழல்களும், கொரோனா கையாள ஆளுமையற்ற தனம், சுஷாந்த் கொலை என போய்க் கொண்டிருப்பதால், அவர்கள் வேறுபாடுகளாலேயே ஆட்சி கவிழும்” என பாஜக தலைமை முடிவு என்கிறது செய்தி.
அதோடு, சேனாவுக்கு ‘சாஃப்ட் கார்னர்’ கொண்ட எவரையும் மத்திய அமைச்சரவையில் எடுத்துக் கொள்ளவில்லை மோதி இப்போது மஹாராஷ்டிராவிலிருந்து மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றிருப்பவர்கள் அத்தனை பேரும் ஃபட்னவிஸ் ஆதரவாளர்கள் என்பதால், ஃபட்னவிஸ் தலைமையை உறுதி செய்துள்ளது மோதி அரசு. சேனா – காங் – தேசியவாத காங் கூட்டணியால் சேனாவுக்கும், காங்கிரசுக்கும், பவாருக்கும் மஹாராஷ்டிராவில் பேரிழப்பு என்கிறார்கள். பாஜக வலுப்பெற்றுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















