6,000 என்.ஜி.ஓ.க்களின் உரிமம் ரத்து…அமித் ஷாவின் அதிரடி சம்பவம்…புலம்பும் மிஷினரிகள்…

மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்த வெளிநாட்டு நன்கொடை சட்ட (FCRA 2020) திருத்தங்களை எதிர்த்து பல என்.ஜி.ஓக்கள் நீதிமன்றம் நாடியிருந்தார்கள். அந்த வழக்கு விசாரணையின் போது, “வெளிநாட்டு நன்கொடை என்பது என்.ஜி.ஓக்களின் அடிப்படை உரிமை கிடையாது. சட்டத்துக்கு பணிந்தால் மட்டுமே நன்கொடை பெறலாம்” என்று மத்திய அரசு காரசாரமாக வாதம் செய்ய, உச்சநீதிமன்றமும், “எந்த நோக்கத்துக்காக நன்கொடை வாங்குகிறோம் போன்ற விவரங்கள் தராத என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற முடியாது” என தொண்டு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் புதுடில்லி-ஜாமியா மிலியா இஸ்லாமியா, இந்திய மருத்துவ சங்கம், நேரு நினைவு அருங்காட்சியகம் உட்பட 6,000 அமைப்புகள் மற்றும் என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும், அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் எப்.சி.ஆர்.ஏ., உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்காததால் ரத்து செய்யப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில் இயங்கும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை பெற, எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.

மேலும் புதிப்பிக்காத தொண்டுநிறுவங்கள் ஏன் புதுப்பிக்கவில்லை. என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து விசாரணை மேற்கொண்டு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள அமித் ஷா ஆலோசித்து வருகிறார்.

அன்னை தெரசாவின் ‘மிஷினரி ஆப் சாரீட்டீஸ்’ என்ற அறக்கட்டளையின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ‘கிறிஸ்துவர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. அன்னை தெரசாவின் தியாகம் மற்றும் தொண்டுக்கு செய்யப்பட்ட அவமரியாதை’ என, எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டன. இது பற்றி மிஷினரி ஆப் சாரிட்டீஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:எப்.சி.ஆர்.ஏ., உரிமத்தை புதுப்பிக்க கோரி நாங்கள் கொடுத்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. அதனால் தான் எங்கள் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கும்படி ஸ்டேட் வங்கிக்கு கோரிக்கை விடுத்தோம். அதையேற்று வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகையில், ‘பதிவு உரிமத்தை புதுப்பிக்கக் கோரி மிஷினரி ஆப் சாரீட்டீஸ் கொடுத்த மனுவில் சில தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் மனு நிராரிக்கப்பட்டது’ என, தெரிவிக்கப்பட்டது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நாடு முழுதும், 6,000 என்.ஜி.ஓ.,க்களின் எப்.சி.ஆர்.ஏ., உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நாட்டில் 22 ஆயிரத்து 762 என்.ஜி.ஓ.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் எப்.சி.ஆர்.ஏ., உரிமம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்து விட்டது.எப்.சி.ஆர்.ஏ., உரிமத்தை டிசம்பர் 31க்குள் புதுப்பிக்கக்கோரி, அரசு சாரா அமைப்புகள் மற்றும் இந்த நிறுவனங்களுக்கு பல முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும் பலரும் விண்ணப்பிக்கவில்லை.

அதனால் ஜாமியா மிலியா இஸ்லாமியா, இந்திய மருத்துவ சங்கம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் உட்பட 5,933 அமைப்புகள் மற்றும் என்.ஜி.ஓ.,க்களின் எப்.சி.ஆர்.ஏ., உரிமம் காலாவதியாகி விட்டன. இந்த நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் தற்போது எப்.சி.ஆர்.ஏ., கீழ் பதிவு செய்யப்பட்டு உரிமம் பெற்றுள்ள என்.ஜி.ஓ.,க்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 829 ஆக குறைந்துள்ளது.இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எப்.சி.ஆர்.ஏ., உரிமம் ரத்து செய்யப்பட்ட என்.ஜி.ஓ.,க்களில் இமானுவேல் மருத்துவ சங்கம், இந்திய காசநோய் சங்கம், மகரிஷி ஆயுர்வேத பிரதிஷ்டாதன், பாரதிய சம்ஸ்கிருத பரிஷத், டி.ஏ.வி., கல்லுாரி அறக்கட்டளை, இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. டில்லி ஐ.ஐ.டி.,யின் எப்.சி.ஆர்.ஏ., உரிமமும் காலாவதியாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிப்பிக்காத தொண்டுநிறுவங்கள் ஏன் புதுப்பிக்கவில்லை. என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து விசாரணை மேற்கொண்டு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள அமித் ஷா ஆலோசித்து வருகிறார்.

Exit mobile version