தமிழகத்தில் 47,000 சிறு குறு நிறுவனங்களுக்கு 1,937 கோடி ரூபாய் கடன் ! 3 மாதங்களில் ரூ.6,600 கோடி நிதி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழக பா.ஜ.க சார்பில் நேற்று நடைபெற்ற மெய் நிகர் காணொளி பேரணியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரை நிகழ்த்தினார் அந்த உரையில் திமுக காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்ச்சித்தார். மேலும் மோடி சர்க்கார் 2.0 ஓராண்டு சாதனையை பட்டியலிட்டு பேசினார்.

தமிழகத்தை பற்றி பேசிய மத்திய அமைசர் கொரோனா பேரிடரை சமாளிக்க கடந்த 3 மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது , தமிழகத்தில் 1 கோடியே 22 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.500 வீதம் 3 மாதங்களில் ரூ.610 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும்.மேலும் 14 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 6 ஆயிரம் மத்திய அரசு வழங்குகிறது.

தமிழகத்தில் மட்டும் 35 லட்சத்து 59 ஆயிரம் விவசாயிகள் மேலும் ஜூன் 14-ஆம் தேதி வரை ரூ.2,825 கோடி மதிப்புள்ள உதவி தொகையை பெற்றுள்ளார்கள் .
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ், சுமார் 8.64 கோடி மக்களை சென்றடையும் விதமாக தமிழகத்திற்கு அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டுள்ளது.

அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்திலிருந்து ஜூன் 11 வரை மாநிலத்தில் சுமார் 47,000 MSME-களுக்கு 1,937 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த சந்திப்பின் போது அவர், சீன பொருட்கள் பயன்பாட்டை குறைப்பது குறித்தும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்!

Exit mobile version