9-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி ! வாயைமூடி மவுனம் காக்கும் ஸ்டாக்கிஸ்டுகள்…

ஆலங்குளம் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.தமிழகத்தில் நாளுக்கு நாள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது.. பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.

இது விஷயத்தில் சமீப காலமாக தமிழக அரசு கறார்தன்மை காட்டி வருவதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்தும் வருகிறது. அந்த வகையில் ஒருவர் சிக்கி உள்ளார். திமுக பிரமுகர்தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பலபத்திரராமபுரத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி.. 35 வயதாகிறது.. திமுக பிரமுகரான இவர், அந்த ஊரில் பொக்லைன் மற்றும் டிராக்டர் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்… முத்துசாமி, நேற்று காலை ஊரில் இருந்து காரில் சின்னக்கோவிலான்குளம் சென்று கொண்டிருந்தார்..

தான் அந்த பகுதியில் முக்கிய பிரமுகர் என்பதால், காரில் திமுக கொடியும் கட்டப்பட்டிருந்தது.. மாவிலியூத்து நோக்கி கார் சென்றபோது, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.. பள்ளி முடித்துவிட்டு, அந்த மாணவி வீட்டுக்கு செல்ல பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருப்பது போல தெரிந்தது.உடனே, அந்த மாணவியின் அருகில் காரை நிறுத்திய முத்துசாமி, பஸ் ஸ்டேண்டில் இறக்கி விடுவதாக சொல்லி, காரில் லிப்ட் தந்து ஏற்றி உள்ளார்… அப்போது முத்துசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.. காரை பஸ் ஸ்டேண்ட் பக்கம் ஓட்டாமல் காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.. அங்கு காரை நிறுத்திவிட்டு மாணவியிடம் சில்மிஷத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, கத்தி கூச்சலிடவும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டனர்.. உடனே அங்கிருந்து தப்பியோட முயற்சித்த முத்துசாமியை அந்த பகுதி இளைஞர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் முத்துசாமியை கைது செய்து, ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அங்கயற்கண்ணி, முத்துச்சாமியின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மாநிலம் வாரியாகப் பார்த்தால் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள்? 

‘பாலியல் வன்கொடுமை’ என்ற வார்த்தையை நீங்கள் கூகுளில் தேடினால் மட்டும் போதும்… நான் தேடியபோது அடுத்தடுத்து இரண்டு செய்திகள் வருகிறது. அதில் ஒன்று வேலூர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது. 

மற்றொரு செய்தியும் வேலூர் மாவட்டத்தில் நிகழ்ந்ததுதான். இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் என்பதைப் பத்திரிகை செய்தியில் பார்க்க முடிகிறது. 

அதற்கு கீழேயும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல செய்திகள் வரிசையாகக் காட்டுகின்றன. 

இவை தவிர, ஆன்லை வகுப்பில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள், பள்ளிக்குள் நடந்த பாலியல் வன்கொடுமைகள் என்று பல செய்திகள் அடுக்கடுக்காக நாம் கடந்த காலங்களில் பார்த்துள்ளோம். இவற்றில் எத்தனை செய்திகள் தேசிய மகளிர் ஆணையத்தின் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை. 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தமிழ்நாட்டில், 375 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை நேரடி உடலுறவு செய்யப்பட்ட பெண்கள் இத்தனை பேர் மட்டும் புகார் கொடுக்கலாம். மற்றபடி தினமும் பெண் குழந்தைகள், பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version