ஜாதி, மொழி வேறுபாடுகளைக் கடந்து லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு குல தெய்வமாகத் திகழ்வது சிறுவாச்சூர் மதுர காளியம்மன். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறக்கப்பட்டு வந்த கோவில் சில வருடங்களாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.
மிகவும் சக்திவாய்ந்த மதுரகாளியம்மன் மகா பெரியவருக்கும் குல தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள், வெள்ளியில் மட்டுமே அம்பாள் கோவிலில் வாசம் செய்வதாக ஆயிரம் வருடங்களை கடந்த நம்பிக்கை. மற்ற தினங்களில் இந்த கோவிலில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைமீது அம்மன் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
மதுரகாளியம்மன் மட்டுமல்லாது பெரியசாமி, கருப்பசாமி ஊர்சுத்தி ஐயா, செல்லியம்மன், சப்த கன்னி அம்மன் என்று பல்வேறு தெய்வங்கள் மலையில் அருள் பாலிக்கிறார்கள் மதுர காளியம்மன் கோவிலுக்கு இருபாலரும் செல்லலாம். ஆனால் மலையிலுள்ள தெய்வங்களை வழிபட ஆண்கள் மட்டுமே செல்வது ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வரும் நடைமுறை.
மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய சென்றார்கள். சென்றவர்களுக்கு மிகக் கடுமையான அதிர்ச்சி காத்திருந்தது. பெரியசாமி, ஐயனாரப்பன், செல்லியம்மன் சப்தகன்னிமார், மிகவும் உயரமான குதிரை வாகனம் போன்ற இறைவனின் திருமேனிகள் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதனை அடுத்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஆலய நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருந்த இந்த மலை கோவில் உள்ள இறைவனின் திருமேனிகள் அடித்து நொறுக்கப்பட்டு உடைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
இதற்குக் காரணம் நாத்திகவாதிகளா? அன்னிய மத அடிப்படைவாதிகளுக்கு குனிந்து சேவகம் செய்யும் திமுக ஆட்சியா? இந்துக்களை இழித்துப் பழித்துப் பேசி, இந்து மதத்தை சிறுமைப்படுத்தும் கும்பலுக்கு துணை போகும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே இதுபோன்ற மிகவும் அதிர்ச்சிகரமான செயல்கள் நடக்கின்றது.