போதை காளான் (Magic Mushroom) என்ற போதை தரும் காளான் விற்பனை கொடைக்கானலில் அதிக அளவில் பெருகிவருகிறது Psilocybin என்கின்ற ஒரு வேதிக் கலவைகள் நிறைந்த இந்த காளான்கள் கொடைக்கானலில் அதிக அளவில் விளைவகிறது. பல்வேறு இடங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், குறிப்பாக இளைஞர்கள், ஆம்லெட்டில் இந்த காளான்களை வைத்து உண்கிறார்கள். இதை உட்கொள்பவர்களை 15 மணிநேரம் வரை போதையில் தள்ளுகிறது. மேலும், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள், விளையும் இந்த காளான்கள் மற்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. பல விடுதிகள் மற்றும் தங்கும் அனுமதியில்லாத பல இல்லங்களில் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த காலங்களில் ஒரு சிலர் இதை உட்கொண்டு இறந்தும் போயிருப்பது கொடுமை. மிக மோசமான இந்த செயல்பாடுகளில், பல இடைத்தரகர்கள் இருப்பதோடு அரசியல் பின்பலமும் உள்ளதாக தெரிகிறது. இது குறித்து மூன்று வருடங்களுக்கு முன்னரே நான் என் கருத்தை, கண்டனத்தை தெரிவித்திருந்தேன். சில வருடங்களுக்கு முன், காவல் துறை ஆய்வாளர் ஒருவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த போதும், அவர் பணியிட மாற்றல் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம்,செட்டியார் பூங்கா ,சின்ன பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்படையாக போதை காளானை ஒரு கும்பல் விற்பனை செய்வதால் சுற்றுலா பயணிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்து குற்றம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும். அடுத்த தலைமுறையை படுகுழியில் தள்ளும் கொடுமையான செயல் இது. இந்த காளான் போதை பொருள் என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து மாநில கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















