ஆவின் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் தயிரின் அளவு குறைந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அனைத்து மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அரிசி, பருப்பு, கோதுமை, உள்ளிட்ட பொருட்களுக்கு 5% சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது என அனைத்து மாநிலங்களும் தங்களது ஒப்புதலை தெரிவித்து இருந்தன. அதேபோல, பால், தயிர், லஸ்ஸி மற்றும் பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கும் 5% சதவீதம் வரி விதிக்கப்பட்டன. இந்த முடிவுகள் அனைத்தும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. ஆனால், சொன்ன விலையை காட்டிலும், மூன்று மடங்கு விலையை தமிழக அரசு உயர்த்தின இருந்தன.
ஆவின் பால் பாக்கெட்டின் கவர் இரண்டு கிராம் போக, பாலின் எடை 515 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், பாலின் அளவு வெறும் 430 கிராம் மட்டுமே இருந்தது. இச்சம்பவம், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்து இருந்தன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தன.
பால் விலையை குறைக்க சொன்னால் பால் அளவை குறைத்து இருப்பதாக விடியல் அரசை பொதுமக்கள் மிக கடுமையாக சாடி இருந்தனர். இச்சம்பவத்தின், தாக்கமே குறையாத நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் பொதுமக்களை கோவத்தின் உச்சிற்கே சென்று இருக்கிறது. அதாவது,
ஆவின் பால் பாக்கெட் 160 கிராம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது வெறும் 110 கிராம் மட்டுமே உள்ளது. பணம் மட்டுமே சரியாக வாங்கி கொள்கிறார்கள் ஆனால், மக்களை மட்டும் இப்படி ஏமாற்றுவது சரியா என தயிர் பாக்கெட்டை வாங்கி ஏமாற்றம் அடைந்த அந்த நபர் தனது வேதனையை வெளிப்படுத்தி காணொளியை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞான பூர்வமாக மீண்டும் விடியல் அரசு தமிழக மக்களிடம் திருடி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















