கொலை வழக்கில் அஸ்வினியை கைது செய்தது தமிழக காவல்துறை!
கோயிலில் அன்னதானம் போடுவதில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக குரல் கொடுத்து பிரபலம் அடைந்த நரிக்குறவப் பெண் அஸ்வினியை கொலை முயற்சி வழக்கில் கைது செய்திருப்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்து மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் அஸ்வினி. கடந்த 2021-ம் ஆண்டு அங்குள்ள கோயில் ஒன்றில் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது நரிக்குறவ பெண் அஸ்வினி தங்கள் உறவினர்களுடன் அன்னதானத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவர்களை கோயில் நிர்வாகிகள் சிறிதுநேரம் கழித்து வந்து சாப்பிடுமாறு கூறியுள்ளார்கள்.
இதனால் கோபமடைந்து அஸ்வினி, ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து , மறுத்தினமே அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அந்தக் கோயிலுக்கு நேரில் சென்று அஸ்வினி மற்றும் அவரது சமூகத்தினருடன் சேர்ந்து அன்னதானம் சாப்பிட்டார். இதுதான் அஸ்வினியை தமிழகம் முழுவதும் தெரிய செய்தது. அஸ்வினியை பல தொலைக்காட்சி சேனல்களும், யூடியூப் சேனல்களும் பேட்டி எடுக்க, முந்தி கொண்டு சென்றார்கள்.
இந்த சூழலில் தான், அதே ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது அஸ்வினியின் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட் அடித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும், அவரது வீட்டிலும் முதல்வர் சாப்பிட்டார். அஸ்வினி வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலினால்இந்திய அளவில் பேசப்பட்டது.
அதன் பின் நடந்தது தான் ட்விஸ்ட் முதல்வர் ஸ்டாலின் தனது வீட்டிற்கு வந்து சென்றது முதலாகவே, அஸ்வினி தன்னை டானாக நினைத்துள்ளார். அந்த ஏரியாவில் உள்ள கடைக்காரர்களிடம் தான் முதல்வருக்கு மிகவும் வேண்டப்பட்டவர்.. என்னை பகைத்துக் கொண்டால் இங்கு நீங்கள் இருக்கவே முடியாது மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் தான் ஒரு நரிக்குறவப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்துள்ளார் . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருக்கழுகுன்றம் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த விஜி என்பவரின் மனைவி நதியா(38). இவர், மாமல்லபுரம் பகுதியில் கடற்கரை செல்லும் வழியில் கடந்த பல ஆண்டுகளாக தரைக்கடை அமைத்து மணிகளால் தயாரிக்கப்பட்ட அணிகலன்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குற சமுதாயத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகள் அஸ்வினி, நதியாவிடம் கடற்கரைப் பகுதியில் கடை அமைக்க கூடாது என அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இதே போல் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த அஸ்வினி, நதியாவை கத்தியால் தாக்கியதாகவும், இதில் அவர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுதொடர்பான புகாரின்பேரில், மாமல்லபுரம் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அஸ்வினியை கைது செய்தனர். பின்னர், திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
நரிக்குறவ சமுதாய மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அஸ்வினி முன்பு கோரிக்கை விடுத்திருந்தார். இதன் பேரில், முதல்வர் அப்பகுதிக்கு சென்று அஸ்வினியை பாராட்டி கடைகள் ஒதுக்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில், கொலை முயற்சி வழக்கில் அஸ்வினி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்