வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் பெறுவது என்பதை காணலாம்.
வெள்ளத்தில் மூழ்கியிருந்த உங்கள் காரை உடனடியாக ஸ்டார்ட் செய்யவேண்டாம். இது உங்கள் காரை மேலும் அதிக பாதிப்படைய வைக்கும். இப்படி செய்தால் உங்களின் கார் இன்சூரன்ஸ் கிடைக்காமலும் போகலாம்.
உங்களின் கார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று முதலில் கார் காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
உங்கள் கார் பற்றிய முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் சேமிக்கவும். உங்களின் கார் நிலை குறித்த புகைப்படம், வீடியோ போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் காரின் பாதிப்பு குறித்த விவரங்கள் துல்லியமாக தெரியவரும்.
முழு இன்சூரன்ஸ் செய்தவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, இழப்பீடு பெறலாம்.
மழையில் பாதித்த வாகனத்தை, முடிந்தால் பழுது பார்க்கும் மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
மெக்கானிக் சேதத்தை ஆய்வு செய்து, ‘எஸ்டிமேட் காஸ்ட்’ என்ற உத்தேச செலவு அறிக்கை வழங்குவார். அதனுடன், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செல்ல வேண்டும்
அங்கு, நிறுவனம் தரும், ‘கிளெய்ம் பார்ம்’ என்ற இழப்பீடு படிவத்தை பூர்த்தி செய்து, உத்தேச செலவு அறிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டும்
இன்சூரன்ஸ் நிறுவனம், மதிப்பீட்டாளரை அனுப்பி வாகனத்தை ஆய்வு செய்யும்.
மதிப்பீட்டாளர், வாகனத்தை நேரில் ஆய்வு செய்து, அறிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வழங்குவார்.
நிறுவனம், தான் ஒப்பந்தம் செய்துள்ள பழுது பார்க்கும் மையத்தில் வாகனத்தை ஒப்படைக்க பரிந்துரைக்கும்
வாகன உரிமையாளர், அதை ஏற்காவிட்டால், தன் விருப்பப்படி, எங்கு வேண்டுமானாலும் பழுதை சரி செய்யலாம். அதற்கான ரசீதை, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வழங்க வேண்டும். வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டை பொறுத்து, தேய்மான செலவை பிடித்து கொண்டு, இழப்பீடு தொகை வழங்கப்படும்.