உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது. பாரதம் இன்னொரு தீபாவளியை கொண்டாட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த 60 வயதுமதிக்கத்தக்க வர்கள் ராமர் கோயில் கரசேவகர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, குஜராத்தின் கோத்ராவில் நடந்ததைப் போன்று, அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் உள்ளது,” என, காங்கிரஸ் எம்.எல்.சி. ஹரிபிரசாத் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.சி. ஹரிபிரசாத் கூறியது பாபர் மசூதியை இடித்தது தொடர்பாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவாகியிருந்தது. இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, குஜராத்தின் கோத்ராவில் நடந்ததைப் போன்று வன்முறை நடக்கும் வாய்ப்புள்ளது. சரியான தகவலை வைத்துக்கொண்டே, நான் கூறுகிறேன். அயோத்திக்குச் செல்லும் மக்களுக்கு, அரசே பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும், 22ல் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு ஹரிபிரசாத்தே காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துவோம். இதுகுறித்து, நகர போலீஸ் கமிஷனரிடம் முறையிடுவோம். ஹரிபிரசாத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும். பொறுப்பான பதவியில் உள்ள அவர், இதுபோன்று பேசுவது தவறு. என பாஜகவினர் எதிப்பு குரல் கொடுத்து வருகிறார்கள்.