நாளை ரீலிஸ் ஆக உள்ள படம் லால் சலாம் இந்த படத்தை ரஜினிகாந்த் மூத்த மகளான ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்டோர் நடித்துளார்கள். லால் சலாம்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் நடித்திருக்கிறார்
லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ட்ரெய்லர் படு மாஸாக வந்திருக்கிறது. மேலும் கண்டிப்பாக இந்தப் படம் சுப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையையும் ரஜினி நம்பி கொண்டிருக்கின்றனர்.முக்கியமாக ட்ரெய்லரில் ரஜினிகாந்த்துக்கு மாஸ் காட்சிகள் இருக்கின்றன. மூணாறு ரமேஷ் ஒரு இடத்தில், ‘பம்பாய்ல பாய் ஆளே வேற டா’ என்று சொல்வதை பார்த்த ரஜினி ரசிகர்கள், கண்டிப்பாக படத்தில் தலைவருக்கு மாஸ் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறிவருகின்றனர்.
மேலும் படம் புரொமோஷனுக்காக லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநரும், ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசினார். அதில் தனது அப்பா சங்கி இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.இது பேசுபொருளானது.
படத்தை பற்றி பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத காரணத்தில் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சங்கீ வார்த்தையை பயன்படுத்தினார் என பேச்சுக்கள் அடிபட்டன.மேலும் ரஜினி சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல என கூறினார். இதனால் லால் சாலம் படம் வெளியே தெரிய ஆரம்பித்தது. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் லால் சலாம் படத்திற்கு போஸ்டர் அடித்திருக்கின்றனர். அந்தப் போஸ்டரில், ‘மும்மதமும் எங்களுக்கு முதல் மதமே’ என்று வாசகம் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், “லால் சலாமை சூப்பர் ஹிட்டாக்க வேண்டுகிறார். காப்பாற்றுங்கள் மக்களே” என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் ட்ரெண்டாகியுள்ளது.
ரசிகர்களும் கிண்டல்: ப்ளூ சட்டை மாறன் மட்டுமின்றி ரசிகர்களில் ஒருதரப்பினரும் இந்த விவகாரத்தை வைத்து சமூக வலைதளங்களில் நக்கல் செய்துவருகின்றனர். அதாவது, லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச்சில் ரஜினிகாந்த் சனாதனத்தையும், வேதங்களையும் குறிப்பிட்டு பேசியிருந்தார். அதனை குறிப்பிட்டிருக்கும் சிலர், “ரஜினிகாந்த் வலதுசாரி சிந்தனையுடையவர் என்பது அந்தப் பேச்சின் மூலமே உறுதியாகிவிட்டது. அதனை அவரது ரசிகர்கள் கண்டிக்கவில்லை. ஆனால் இப்போது மும்மதமும் முதல் மதமே” என்று எதற்காக போஸ்டர் அடிக்கிறார்கள் என்று விமர்சனத்தை முன்வைத்துவருகின்றனர்.