நாம் தினமும் 15 நிமிடம் சூரிய ஒளி வெளிச்சத்தில் பொதுமக்கள் நின்றால் கொரோனா உள்ளிட்ட அனைத்து வைரஸ் நோய்களை போக்கிவிடலாம் என மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் செளபே தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் 8000கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய்க்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் 170க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே பார்லிமென்டிற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது :
மனிதர்களுக்கு சூரிய ஒளி நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகை வைரஸ் நோய்களையும் அது கொல்லும்.
சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. மக்கள் அனைவரும் சூரிய ஒளியில் 10 முதல் 15 நிமிடங்கள் அமர்ந்திருந்தால் அவர்கள் குணமடைவர் என்று அவர் கூறினார்.