நீண்ட நாள் பகைக்கு பழி தீர்க்கும் விதமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை குறி வைத்து ஈரான் ராணுவம் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை துவங்கியதாக ஈரான் அறிவித்துள்ளது
அடுத்த 12 மணிநேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தும். இதற்கு முழுவீச்சில் ஈரான் தயாராகி வருகிறது என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா இதனால் சுதாரித்து கொண்ட இஸ்ரேல் அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தது.
மேலும் ஏற்கனவே லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் இஸ்ரேலுக்கு மோதல் வலுத்த நிலையில் தான் மத்திய கிழக்கு பகுதிகளில் அமெரிக்கா தனது படைப்பலத்தை அதிகரித்தது. விமான தாங்கி போர்க்கப்பல், போர் விமானங்கள் மட்டுமின்றி சுமார் 50 ஆயிரம் படை வீரர்களை அமெரிக்கா மத்திய கிழக்கில் நிலை நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தும் பட்சத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை பாதுகாக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபடும். இதனால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும்” என எச்சரிக்கை செய்ததுஅமெரிக்கா . அதையும் மீறு ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடைதியுள்ளது
இதற்கிடையே இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது ஈரான் ஆனால் அதுதான் இல்லை உண்மை நிலவரமோ வேறு,, ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.மேலும் பேசிய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ராணுவத்தினர் இஸ்ரேல் ராணுவத்தின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக தெரிவித்தார்.
தங்களை யார் தாக்கினாலும் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார். ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், இதற்கு உரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறிய நெதன்யாகு, இந்த தாக்குதலை முறியடிக்க உதவிய அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஈரான் தக்குதலை எதிர்பார்த்து கொண்டிருந்த இஸ்ரேல் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் இரண்டு கடற்படை கப்பல்கள் ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டூம் நடுவானில் சுட்டு வீழ்த்தின.இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை குறிவைத்து ஈரான் ராணுவம் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி நேற்று இரவு தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலைத் தொடங்கியதும், ஏவுகணை தாக்குதலைக் குறிக்கும் வகையில் இஸ்ரேலில் சைரன்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகும்படி அறிவுறுத்தப்பட்டனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் அங்கிருந்து வெளியே வரவேண்டாம் என்று இஸ்ரேல் ராணுவம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து அங்குள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர்.அதேநேரத்தில் இஸ்ரேல் ராணுவம் தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியது. ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டூம் நடுவானில் சுட்டு வீழ்த்தின.
பெரும்பாலான ஏவுகணைகள் வானிலேயே அழிக்கப்பட்ட நிலையில் ஒரு சில ஏவுகணைகள் இலக்கைத் தாக்கி அழித்ததாகத் தெரிகிறது.மேலும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளை அமெரிக்கா கடற்படையினர் நடுவானில் தடுத்து அழித்தனர். இஸ்ரேல் கடற்பரப்பில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் இரண்டு கடற்படை கப்பல்கள் ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. மேலும் வெள்ளை மாளிகையில் இருந்தபடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்ததால் மூன்றாம் உலகப் போர் அபாயம் எழுந்துள்ளது.