கர்நாடக மாநிலம் உத்தர கன்னடாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















