தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “GET OUT MODI” என பதிவிட்டது தொடர்பாக பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் ” நீங்கள் GET OUT MODI என போடுங்கள்.. அதற்கு நான் நாளை என்னுடைய டிவிட்டரில் காலை 6 மணிக்கு GET OUT STALIN என பதிவிடுகிறேன். இரண்டில் மக்கள் எதை வரவேற்கிறார்கள் என பார்ப்போம்” என பேசியிருந்தார்.
இதனையடுத்து, இன்று காலை சரியாக 6 மணிக்கு சொன்னதை போலவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை #GetOutStalin என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் திமுகவை விமர்சித்தும் பதிவு வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம்,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தில் உள்ள இந்த திமுக தலைமையிலான அரசை விரைவில் மக்கள் வெளியேற்றம் செய்யப்படுவார்கள்” என கூறியுள்ளார்.
அதைப்போல வேங்கை வயல் விவகாரம், கள்ளச்சாராய விவகாரம், அரசு பேருந்து சரியான வசதி இல்லாமல் இயங்குவது என பல குற்றசாட்டுகளை வைத்து அதற்கான புகைப்படத்தையும் அந்த பதிவில் வெளியீட்டு GET OUT STALIN என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு இருக்கிறார்.இது ஒரு மில்லியனை தாண்டி உலக அளவில் ட்ரெண்டாகி உள்ளது , “GET OUT MODI” ஹேஷ்டேக் காணாமல் போயுள்ளது
இந்த நிலையில் நேற்று, தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இதனை ஒட்டி, “கல்வியை அரசியலாக்க வேண்டாம் . மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராயுங்கள்.” என்று குறிப்பிட்டு தர்மேந்திர பிரதான் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே மத்திய அரசின் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ‘அரசு பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி கல்வி கற்க உரிமை இல்லையா முதல்வரே? எங்களுக்கு மும்மொழி கற்க அனுமதி தாருங்கள்’ என, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு பள்ளி மாணவியர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த வீடியோ பரவி வருகிறது.மும்மொழி கல்வி கொள்கையில், ஹிந்தி கற்பது கட்டாயமில்லை. தங்கள் விருப்ப பாடமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை மாணவர்கள் படிக்கலாம்’ என, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு, மேலும் வலு சேர்க்கும் விதமாக பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவியர், பள்ளியில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.அதில், ‘தமிழக முதல்வரே… அரசு பள்ளி மாணவரான எங்களுக்கு மும்மொழி கற்க உரிமை இல்லையா? ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் மும்மொழி கற்க அனுமதி கொடுங்க’ என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.