தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், கடற்படை பலத்தை அதிகரிக்கும் விதமாக புதிய போர் கப்பல் ஒன்றை விரைவில் நமக்கு ரஷ்யா வழங்க இருக்கிறது இந்த கப்பல் அரபிக்கடலில் இந்திய கடற்படையின் பலத்தை அசுரத்தனமாக அதிகரிக்கும் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கப்பலின் பலம்
இது கிர்வாக்-III வகையை சேர்ந்த போர்க்கப்பல். ரஷ்யாவின் தலைசிறந்த போர்க்கப்பல்களில் இது முக்கியமான வகைகளாகும். இந்தியா இதற்கு ஐஎன்எஸ் தமலா என்று பெயரிட்டிருக்கிறது. இந்த வகை போர்க்கப்பல்கள் 4 வகையில் சண்டையிடும்.
- வான்பரப்பு
- நேரடி சண்டை
- நீருக்கு அடியில்
- மின்னணு போர்
பிளஸ் பாயிண்ட்கள்
இதில் வான்பரப்பு எனில்,’காமோவ்-28′ எனும் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஹெலிகாப்டர், ‘காமாவ்-31’ எனும் எச்சரிக்கை ஹெலிகாப்டர் போன்றவை இந்த கப்பலில் தரையிறங்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வான் பரப்பில் சண்டையிட முடியும். அதேபோல நேரடி சண்டையை பொறுத்த வரை, 450 கி.மீ தூரத்திற்கு பாயும் பிரமோஸ் ஏவுகணைகள், ஷ்டில் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் இந்த கப்பலில் இருக்கின்றன. ஷ்டில் ஏவுகணைகள் வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது.
அசுர திறன்கள்
போர் விமானங்கள் கப்பலை சுத்துப்போடும்போது 40-70 கி.மீ தொலைவுக்கு முன்னதாகவே அந்த விமானங்கள் வருவதை உணர்ந்து அதை தாக்கி அழிக்கும் தன்மை இந்த ஏவுகணைகளுக்கு உண்டு. ஒலியை விட வேகமாக பயணிக்கும் என்பதால் இந்த ஏவுகணையின் இலக்கிலிருந்து அவ்வளவு சீக்கிரத்தில் தப்பிவிட முடியாது.
நவீன தன்மை
நீருக்கடியில் சண்டையிடும் திறன் எனில், நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிராக ஏவுகணைகளை பயன்படுத்தும் திறன் இந்த கப்பலுக்கு இருக்கிறது. நீருக்கடியில் செல்லும் இந்த ஏவுகணைகள் இலக்கை தாக்கி அழிக்கும். நான்காவதாக இருக்கும் மின்னணு போர் என்பது, ரேடியோ, அகச்சிவப்பு கதிர்கள் போன்றவற்றிலிருந்து ஒளித்துக்கொள்ளும் திறனை குறிக்கிறது. எதிரிகளின் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் சிஸ்டத்தை ஜாம் செய்வது, ரேடர் சிக்னலில் சிக்காமல் தப்பிப்பது போன்ற வசதிகள் இந்த கப்பலில் இருக்கிறது.
நண்பேன்டா ரஷ்யா
இத்தனை வசதிகளை கொண்ட கப்பல் இந்திய கடற்படைக்கு விரைவில் வரும் என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது. இது ரஷ்யாவில் தாயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் முக்கியமான தொழில்நுட்பங்களை இந்தியாவின் ‘டிஆர்டிஓ’ இணைத்து தயாரித்துள்ளது. எனவே இந்த கப்பல் தயாரிப்பில் ரஷ்யா பாதி இந்தியா பாதி பங்களித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கு சிக்கல்
பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு மோதல் போக்கு அதிகரித்திருக்கும் சூழலில், இந்த சூழலில் ரஷ்யா கொடுக்கும் கப்பல் நிச்சயம் அரபிக்கடலில் நமது பலத்தை அதிகரிக்கும். நேரம் பார்த்து ரஷ்யா நமக்கு இந்த உதவியை செய்திருக்கிறது. ரஷ்யாவும், இந்தியாவும் நீண்ட கால நண்பர்கள். அதன் அடிப்படையில் கூட இந்த உதவியை ரஷ்யா நமக்கு செய்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இந்தியாவை பகைத்துக்கொள்ளும் பாகிஸ்தானுக்கு நல்ல அடி கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.
அரபிக்கடலை இந்தியாவும் பாகிஸ்தானும் ஷேர் செய்துக்கொள்கின்றன. இருப்பினும் இதில் இந்திய கடற்படையின் ஆதிக்கம்தான் அதிகம். இந்தியா சார்பில், ஐஎன்எஸ் விக்ரகாந்த், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என இரண்டு போர்க்கப்பல்கள் இங்கு உள்ளன.
அரபிக்கடலில் யாருக்கு பலம்?
தவிர தாக்குதல் கப்பல்கள் 10க்கும் அதிகமாக இருக்கிறது. மேலே சொன்ன ரஷ்யாவின் ‘கிர்வாக்’ வகை கப்பல்கள் 15க்கும் அதிகமாக இருக்கிறது. சிறிய வகையிலான, ஆனால் வேகமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் கப்பல்கள் 25க்கும் அதிகமாக இருக்கிறது. 16க்கும் அதிகமான நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கின்றன. 200க்கும் அதிகமான கடற்படை விமானங்கள்/டிரோன்கள், 67,000க்கும் அதிகமான கடற்படை வீரர்கள் அரபிக்கடலை பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், துருக்கி கடற்படைக்குச் சேர்ந்த TCG Buyukada என்ற போர்க்கப்பல் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருகை “நல்லிணக்க பயணம்” என பாகிஸ்தான் கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடல் ஒத்துழைப்பை வலுப்படுத்தவே இந்த பயணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்துக்கு சென்றுள்ள நிலையில், துருக்கியின் இந்த நடவடிக்கை பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும்வரை போராட்டம் தொடரும் என இந்தியா உறுதி கூறியுள்ளது. அதனடிப்படையில், பாகிஸ்தானுடன் உள்ள சிந்து ஆற்றின் நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது, பாகிஸ்தானிய கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்கள் தடை, பாகிஸ்தானிய விமானங்களுக்கு இந்திய வான்வழி மூடல் மற்றும் தூதரக நிலை குறைத்தல் போன்ற பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் பாகிஸ்தான் கடற்படை பொது தகவல் துறை வெளியிட்ட அறிக்கையில், TCG Buyukada கப்பல் கராச்சி துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், துருக்கி மற்றும் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் இதை வெகு உற்சாகமாக வரவேற்றதாகவும் கூறியுள்ளது.
ஆனால் தற்போது ரஷ்ய போர்க்கப்பல், விக்ராந்த் இருக்கையில் கடல் ராஜா இந்தியா தான்
Get real time update about this post categories directly on your device, subscribe now.















