உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகாண் நகரத்தில் பிறந்தது. இது தற்போது உலகம் முழுவதும் பரவி உயிர் கொல்லி நோயாக மாறி 30000 உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த நிலயில் சீனா தற்போது இயல்பு நிலைக்கு மாறியுள்ளது. ஆனால் உலகமோ தங்களின் பொருளாதாரத்தை இழந்து தள்ளாடி வருகின்றது. .
கொரோனாவை ஆரம்பித்து வைத்த சீனா எப்படி அதை கட்டுப்படுத்தியது . இது எப்படி சாத்தியம் ஆகும் என் உலக நாடுகளின் பார்வை சீன மீது சந்தேக பார்வையாக மாறியுள்ளது.
ஒரு வேளை சீனாவின் திட்டமிட்டு செயலா என பல நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு ஒட்டு மொத் த காரணம் சீனாவில் அமைந்துள்ள அரசியலும், ஆட்சி அதிகாரமும்தான். சீனாவில் மொத்த அதிகாரமும் அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் மட்டுமே .
அங்கு அதிபர் சொல்வதுதான் அங்கு சட்டம். அதிபரை மீறி யாரும் எதுவும் பேச முடியாது . இதன் காரணமாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் போய்யுள்ளது . உலக நாடுகள் சீனாவை பார்த்து அச்சப்படுவதற்கும் இதுதான் காரணம். இதனால் உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது. கோரோனோ உலக அளவில் கட்டுக்குள் கொண்டுவந்தவுடன் சீனா பல சவால்களை சந்திக்க நேரிடும் என்பது நியாதி !
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சீனா-அமெரிக்கா இரு நாடுகளும் தங்கள் ஏற்றுமதி பொருட்களுக்கு மாற்றி மாற்றி வரி விதித்துக்கொண்டன. இது போர் அபாயம் ஏற்படும் சூழலை ஏற்படுத்தியது. அமெரிக்காவின்எதிரி நாடாக சீனா விளங்கியது. ஆனால் இந்தியா மீது சீன அதிபர் ஜி ஜிங் பிங்குக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் அதிக கருத்து வேறுபாடுகள் இல்லை. இரு நாடுகளுமே இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ளன. கிட்டத்தட்ட 6000 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்துள்ள அமெரிக்கா சமீபத்தில் ஈரான் புரட்சிகர ராணுவத் தளபதி குவஸம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு ஈரானுடன் கடும் பகையில் ஈடுபட்டது.
ஈரான் – அமெரிக்கா சண்டையால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளது என கூறப்பட்டது. ஆயுத பலத்தில் அமெரிக்காவுக்கு சீனா சற்றும் சளைத்த நாடு இல்லை என்றாலும் சீனா வைரஸ் பரப்பி பயோ வார் மூலம் உலக நாடுகளின் வர்த்தகத்தை பாதிக்கிறது என செய்திகள் உலா வருகின்றன.
ஆனால் இந்த ஊகங்களின் நம்பகத் தன்மை கேள்விக்குறிதான். சீனாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களது எண்ணிக்கை 81,500. அமெரிக்காவில் ஓரிகன், கலிப்போர்னியா மாகாணங்களில் பாதிப்பு எண்ணிக்கை மணிக்கொருமுறை அதிகரித்து 1 லட்சத்தை தொட்டுவிட்டது. இறப்பு எண்ணிக்கை 1000த்தை தாண்டியதால் தற்போது உலக நாடுகளுக்கு சீனா மீது பலத்த சந்தேகம் கிளம்பி உள்ளது. இந்த சந்தேகம் உறுதிபடுத்தப்படவில்லை என்றாலும் கூட சீனா அமெரிக்காவுனான உயிரியல் போருக்காக தன் குடிமக்கள் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் செல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சீனாவில் 70 சதவீதம் சீனர்கள் கொரோனாவில் இருந்து தடுப்பு முறையால் குணமடைந்ததாக அதிபர் ஜி ஜிங் பிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சோதனை, தடுப்பு மருந்து இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. ஆனால் சீனா மருந்து கண்டுபிடித்து அதனை வெளி உலகுக்கு தெரியப்படுத்தாமல் உள்ளதா எனவும் கேள்வு எழுகிறது