காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்
திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை..
தொழில் நகரமான திருப்பூர் தற்போது
கொரானா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக இருந்து வருகிறது. இது பச்சை மண்டலமாக மாறும் போதுதான் திருப்பூர் சகஜ நிலைக்கு திரும்பும்.
பச்சை மண்டலமாக மாற்றுகின்ற பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அரசுக்கும் காவல்துறைக்கும் ஒவ்வொரு குடிமகனும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரானா தொற்றை முற்றிலுமாக தடுக்க முடியும்.
கடந்த 40 நாட்களாக கோவில்கள் பூட்டப்பட்டிருக்கிறது. எந்தக் கோவிலிலும் வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கைவிடப்பட்டுள்ளது, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் கைவிடப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க திருப்பூர் பெரிய தோட்டம் கொரானா தொற்று அதிகம் இருக்கின்ற பகுதியாக இருப்பதால் அந்தப் பகுதி அரசு அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மத அடிப்படைவாதிகள் ஒன்று ஒன்று சேர்ந்து ரம்ஜான் நோன்பு இருக்கிறோம் எனவே கடைகளைத் திறக்க வேண்டும் என அதிகாரிகளை மிரட்டி
கடை திறந்து கூட்டத்தை சேர்த்துள்ளனர், கடையை அடைக்க சொன்ன காவல்துறையை கண்டித்து 300 பேர் கூட்டமாய் சேர்ந்து இரண்டு மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதேபோல் மங்கலத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக இந்த மத அடிப்படைவாத கும்பல் மறியல் செய்ததையும் அனைவரும் அறிந்ததே..
திருப்பூர் ஒரு மிகப்பெரிய பனியன் உற்பத்தி நகரம் இந்தத் தொழிலை நம்பி பல லட்சக்கணக்கான வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ளனர். இதேபோல் தொழில் முனைவோர் பல கோடிக்கணக்கில் பனியன் தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நகரில் பனியன் உற்பத்தி தொடங்கினால்தான் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர்கள் உணவு உண்ண முடியும்.
இந்த நெருக்கடியான நிலையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
ஆனால் மத அடிப்படைவாத கும்பல் ஒன்று ஆங்காங்கே கூட்டங்களை சேர்த்து மதத்தின் பெயரால் கொரானா பரவும் வாய்ப்பை உருவாக்கி வருகிறது.
இந்துக்கள் வெளியில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றால் உடனே வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்
முஸ்லீம்கள் குரானா பரப்பும் வகையில் ஒன்று கூடினால், அவர்கள் மீது பெயருக்கு வழக்குப்பதிவு செய்து அதோடு கிடப்பில் போட்டுவிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதனால் ஊக்கம் பெற்ற மதவெறி கும்பல் தினம்தோறும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகிறது. இதுபோன்ற போராட்டங்கள் நடத்திய எவரையும் காவல்துறை கைது செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற போராட்டங்களால் இத்தனை மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பது வீணாகப் போய்விடும் அரசின் அத்தனை நடவடிக்கைகளும் வீணாகப் போய்விடும் இதை அரசும் காவல்துறையும் உணரவேண்டும் அரசின் விதிமுறைகளை மீறி கடை திறப்பது மற்றும் போராட்டங்கள் நடத்துபவர்களை கைது செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அரசின் நடவடிக்கை வெற்றியடையும்.
திருப்பூர் பழைய நிலைக்கு திரும்பவும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இந்த மத அடிப்படைவாத கும்பலை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















