தருமபுரி திமுக எம்.பி., செந்தில்குமார் நமது ஆட்சி அமைந்தவுடன் தொண்டர்களுக்கு மட்டுமே அரசு திட்டங்கள் வேறு யாருக்கு அளிக்கப்படாது என்று பேசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக செந்தில்குமார் எம்.பி., சுற்றுப்பயணம் என்ற பேரில் தொண்டர்களை அழைத்துக்கொண்டு சுற்றி வருகிறார்.
அதே போன்று நேற்று பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செந்தில்குமார் பேசியதாவது: திமுக ஆட்சி ஸ்டாலின் தலைமையில் அமைந்தவுடன், அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் திமுக தொண்டர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதுவும் நானே தேடித்தேடி வழங்குவேன்.
அவர்கள் எந்த கிராமத்தில் இருந்தாலும் அரசு திட்டத்தை வழங்குவேன். மேலும், மற்றவர்களுக்கு எதுவும் கிடையாது என்று வெளிப்படையாகவே பேசினார். இதனை கேட்ட பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.
ஆட்சி அமையவில்லை அதற்குள் தமிழக மக்களை எப்படி புறக்கணிக்க வேண்டும் என்று திமுகவினர் திட்டம் தீட்டியுள்ளனர் என ஆதங்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி பெரியாம்பட்டி கிராமமக்கள் பேசியதாவது: திமுகவினர் எப்போதும் ஆட்சி அமைக்கவிட மாட்டோம். அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில்குமார் கூறியது போன்று அவர்கள் ஒரு போதும் ஆட்சி அமைக்க முடியாது என்றனர்.
Via Mediyaan news
BJP #BJPTN #TNBJP #Annamalai
TNBJYM
BJPTN
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















