பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையேயான சண்டை நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது ஒரு வழியாக உலக நாடுகளின் பேச்சுவார்த்தையை அடுத்து இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.
சண்டைக்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில் : பாலஸ்தீனம், இஸ்ரேலை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்றும் என கூறினார்.
இதன் பின் ஹமாஸுக்கும் நெருக்கடி வலுத்தது,பலஸ்தீனமும் இஸ்ரேலும் தாக்குதலில் இறங்கினார்கள்
ஹாமாஸ் ராக்கெட்டுகளை இஸ்ரேல் வான்வெளியில் தடுத்து நிறுத்தியதால் இஸ்ரேலுக்கு மிக பெரிய இழப்பு ஏற்படவில்லை. இஸ்ரேல் பதிலுக்கு அதிரடி வேட்டை நடத்தியது. பலஸ்தீனத்திற்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டது. ஹமாஸ் பக்கம் முக்கிய தளபதிகளை காலி செய்தது இஸ்ரேல்.இதற்கு மேல் யுத்தம் நீடித்தால் இஸ்ரேல் தரைபடைகள் காசாவுக்குள் நுழையும் ஆபத்து இருந்தது.
இந்த நிலையில் உலக நாடுகளின் பேச்சுவார்த்தையை அடுத்து இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் இறுதியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார். ‘எங்களது இலக்கை நாங்கள் அடைந்து விட்டோம். இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’ என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது