மாரிதாஸ், மதுரையைச் சேர்ந்தவர். ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். இவர் வலதுசாரி சிந்தனையாளர் . பல உண்மைகளை தைரியத்துடன் சொல்லி வருகிறார். மேலும் இவரின் கருத்துக்கள் பல மட்டங்களில் புரிதல்களை உண்டாக்கி வருகிறது. இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டத்தை பற்றியும் அவர்களின் செயல்பாடுகளை பற்றியும் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் தான் இவர். கடந்த நாலைந்து வருடங்களாகத் தன்னுடைய கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார். அத்துடன் கல்லூரிகளில் நடைபெறும் கருத்தரங்குகளிலும் பங்குபெற்று வருகிறார்.
இந்த நிலையில்
நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழகத்தில் தென்மாவட்டங்கள் தனி மாநிலமாக தெலுங்கானா போல் பிரிய வேண்டிய நேரம் இது. கருத்தினை பதிவிட்டுள்ளது பெரும் பரப்பப்பினை உண்டாக்கியுள்ளது
அவர் கூறியுள்ளதாவது.
10 தென் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி விவரம்:
மதுரை : 3,72,123
தேனி : 1,05,922
திண்டுக்கல் : 1,22,877
சிவகங்கை : 1,12,026
தூத்துக்குடி : 92,221
புதுக்கோட்டை 87,262
கன்னியாகுமரி 1,90,208
திருநெல்வேலி 1,47,718
ராமநாதபுரம் : 56,202
விருதுநகர் : 1,29,782
மொத்தம் : 14,16,341 தடுப்பூசிகள்.
மொத்தம் 15 லட்சம் தடுப்பூசி கூட கிடைக்கவில்லை. ஆனால் சென்னை ஒரு மாவட்டத்திற்கு மட்டும் 20,90,310 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துள்ளது திமுக அரசு.
இந்த நிலை தென் மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் ஆரம்பித்து எந்த மருந்து பொருட்களும் கிடைக்கவில்லை. இதற்கு மேலும் சும்மா தமிழ் நாடு என்று சொல்லி ஏமாறுவதில் என்ன அர்த்தம் உள்ளது?
நிறுவனங்கள் தமிழகம் வருகிறது என்பார்கள், தொழிற்சாலைகள் தமிழகம் வருகிறது என்பார்கள் அனைத்தும் சென்னை நோக்கிச் செல்லுமே ஒழியத் தென் தமிழகத்திற்கு எதுவும் கிடைக்காது. இதற்குப் பேர் வளர்ச்சியா?
கொடுமை கொரொனா காலத்தில் கூட தடுப்பூசியில் கூட தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படும் என்றால் தாமதம் இல்லாமல் தெலுங்கானா போல் தனி மாநிலமாகப் பிரிவது தான் ஒரே தீர்வு.
தமிழ்நாடு கொங்கு நாடு , கன்னியாகுமரி தனி யூனியன் என்று 3,4 மாநிலமாக பிரிந்தாலும் அதை வரவேற்போம். ஆனால் இனியும் முட்டாள்களாகப் பிச்சை எடுக்க முடியாது.
-மாரிதாஸ்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















