கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து வலது சாரி சிந்தனையாளர் விஜகுமார் அருணகிரி அவர்களின் பதிவு:
எடியூரப்பாவுக்கு அடுத்து முதல்வர் யார்என்று கர்நாடக மீடியாக்கள் விவாத ம் நடத்தி வருகின்றன. இதில் முன்னணி யில் இருப்பவர்கள் இருவர்.முதலில் இருப்பவர் பிரகலாத் ஜோஷி இரண்டாவது இடத்தில் இருப்பவர் சி.டி.ரவி.இந்த போட்டோவில் கூட எடியூரப்பா வுக்கு அடுத்து இருப்பவர் பிரகலாத் ஜோஷி அடுத்து இருப்பவர் சி.டி ரவி பிரகலாத் ஜோஷி முன்னாள் கர்நாடகமாநில பிஜேபி தலைவராக இருந்தவர் இப்பொழுது மத்திய அமைச்சராக இருக்கிறார்.பாராளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சராக 2019 ல் இருந்து பணியாற்றி வருகிறார் மோடியின் நம்பிக்கையை பெற்ற அமைச்சர்களில் பிரகலாத் ஜோஷியும் ஒருவர் தார்வாட் லோக்சபா தொகுதியில் தொடர்ந்து 2004 ல் இருந்து 2019 வரை 4 முறை வெற்றி பெற்று இருக்கிறார். லிங்காயத்துக்கள் அதிகம் உள்ள வடக்கு கர்நாடகாவில் பிரகலாத் ஜோஷி தொடர்ந்து மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்று வருகிறார்.
எடியூரப்பா பிஜேபி மேலிடத்துடன் மல்லு க்கு நின்ற 2012 ம் ஆண்டில் கர்நாடக மா நில பிஜேபி தலைவராக பொறுப்பேற்று 2016 வரை தொடர்ந்து பிஜேபி தலைவராக மிக சிறப்பாக பணியாற்றியவர் எடியூரப்பா 2013 கர்நாடக சட்டமன்ற தே ர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்டு தானும் தோற்று பிஜேபியையும் தோற்கடிக்க வைத்து தெருவில் நின்ற பொழுது பிரகலாத் ஜோஷி எடியூரப்பா வை மறுபடியும் பிஜேபிக்கு கொண்டு வந்து கர்நாடகாவில் பிஜேபியை பலமாக்கியவர்.
இதனால் கர்நாடக மாநில அரசியலில் மோடியின் நம்பிக்கை உரியவர்களில் முதல் இடத்தில் இருக்கிறார் பிரகலாத் ஜோஷி. இவருக்கு இன்னொரு பலம் என்னவென்றால் இவர் ஒரு பிராமணர்.லிங்காயத்து ஒக்கலிகர் என இரண்டு பெ ரிய இனங்களின் தலைவர்களை சுற்றியே நடைபெற்று வரும் கர்நாடக அரசியல்பிரகலாத் ஜோஷி முதல்வராக வரும் பொழுது ராம கிருஷ்ண ஹெக்டே என்கி ற பிராமணர் முதல்வராக இருந்த பொழுது தேசிய அரசியலில் கர்நாடக அடைந்த பெருமையை மீண்டும் பெற முடியும். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எடியூரப்பா என்கிற லிங்காயத்து தலைவரை வைத்து கர்நாடகாவில் பிஜேபி உருவாக்கிய கட்டுமானத்தினால் பிஜேபி ஒரு லிங்காயத்து கட்சி என்கிற அடைமொழியுடன் வடக்கு கர்நாடகாவில் மட்டும் வலுவாக இருப்பதால் தெற்கு கர்நாடகாவில் உள்ள ஒக்கலிகர்களிடையே
பெரிய அளவில் வளர முடிய வில்லை.
ஆனால் கால மாற்றம் தெற்கு கர்நாடகாவில் ஒக்கலிகர் இனத்தின் அடையாள
மாக இருந்த தேவகவுடா குடும்பத்தின் மத சார்பற்ற ஜனதா தளத்தை வலுவிழக்க செய்து வருவதால் ஒக்கலிகர்களின் தெற்கு கர்நாடகாவில் பிஜேபி இப்பொழு து பலமாக வளர்ந்து வருகிறது
இந்த நேரத்தில் எடியூரப்பாவுக்கு அடுத்து மீண்டும் ஒரு லிங்காயத்து தலைவரை முதல்வராக கொண்டு வந்து பிஜேபி ஒக்கலிகர்களிடம் இருந்து மீண்டும் விலகி இருக்க விரும்பாது. அதனால் லிங்காயத்து இல்லாத இன்னொருவர் தான் அடுத்த கர்நாடக முதல்வர்.பிராமணரான பிரகலாத் ஜோஷிக்கு போட்டியாக அடுத்த முதல்வர் ரேசில் வந்து கொண்டு இருப்பவர் சி.டி ரவி.இப்பொழு து தமிழக பிஜேபிக்கு பொறுப்பாளராக
இருக்கிறார் தமிழக பிஜேபி தலைவராக இருக்கும் அண்ணாமலையை அரசியல்க்கு கொண்டு வந்தவர் இவர் சி.டி ரவி.ஒக்கலிகர் இனத்தை சார்ந்தவர் தெற்கு கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் மாவடத்தில் பிஜேபியை வளர்த்தவர்.சிக் மகளூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2004 ல் இருந்து 2018 சட்டமன்ற தேர்தல்
வரை தொடர்ச்சியாக 4 முறையாக ஜெயி த்து இருக்கிறார்.இப்பொழுது பிஜேபியின் தேசிய பொது செயலாளரா இருக்கும் சி.டி ரவி எடியூரப்பாவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் தான்.
இதை. விடமுக்கியமானது என்னவென்றால் அண்ணாமலையை ஐபிஎஸ் பதவியை துறக்க வைத்து பிஜேபிக்கு கொண்டு வந்துள்ளார்அண்ணாமலைக்கும் சி.டி ரவிக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? பாபா புதன்கிரி யை நோக்கி பயணிப்போம்.முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் சி்க்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன்கிரி என்கிற ஒரு முஸ்லிம் தர்க்கா இருக்கிறது. இதை தென்னிந்தியாவின் அயோத்தி என்றே கூறுவார்கள்.ஏனென்றால் இதற்கு பக்கத்திலேயே தத்தாத்ரேய பீடம் என்கிற இந்துக்களின் வழிபாட்டு தளமும் இருக்கிறது. இந்த பாபா புதன்கிரி தளத்தை பாபா புதன் என்கிற ஒரு சூ ஃபி ஞானியின் அடை யாளமாக இஸ்லாமியர்கள் உரிமை கொ ண்டாடி வருகிறார்கள். பதிலுக்கு இந்துக் கள் உலகின் ஞான குருவாகவாகவும் மும்மூர்த்திகளின் அடையாளமாக கருதப்படும் ஸ்ரீதத்தாரேயர் பாபா புதன் கிரிஅமைந்துள்ள சந்திரகிரி மலைப்பகுதியி ல் இருந்ததாக நம்புகிறார்கள்.
இதனால் இந்துக்கள் தத்தாத்ரேயர் பீடம் அமைத்து பாபா புதன் கிரியில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.கர்நாடகாவில் கா ங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது அங்கு இந்துக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதும் பதிலுக்கு இந்துக்கள் போராடி மீட்பதும் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.
லிங்காயத்துகள் மாதிரி ஒக்கலிகர்கள் இடையே மிக தீவிரமான இந்து மதப்பற்று இருந்தது இல்லை. இதனால் தான் மதசார்பற்ற ஜனதா தளம் இங்கு வலுவாக இருந்தது. ஆனால் பாபா புதன் கிரியைமையப்படுத்தி சி.டி ரவி எடுத்து சென்ற மத உணர்வு போராட்டங்கள் ஒக்கலிகர் ளிடையேயும் மத உணர்வை கொண்டு
சென்று இப்பொழுது மத சார்பற்ற ஜனதா தளத்தை காணாமல் செய்து விட்டது
இப்படித்தான் 2017 டிசம்பரில் பாபா புதன் கிரியில் ஸ்ரீ தத்தாத்ரேயேர் ஜெயந்தி அன்று சி.டி ரவி தலைமையில் இந்து அமைப்புகள் பாபா புதன்கிரி மலையை மீட்பு போராட்டத்தை நடத்திய பொழுது சிக்மகளூர் மாவட்ட எஸ்பியாக இருந்த அண்ணாமலை அதனை தடுக்க வந்தார் அப்பொழுது நடைபெற்ற அண்ணாமலை சி.டி ரவி சந்திப்பும் அதன் விளைவுகளும் தான் அண்ணாமலையை காக்கி உடை யை துறக்க வைத்து காவி அரசியலை தேட வைத்தது. ஆச்சரியம் என்னவென் றால் மூன்று வருடங்களுக்கு முன் சிக்மகளூரில் இருந்த அண்ணாமலையும் சி.டிரவியும் இப்பொழுது தமிழக பிஜேபியில் இருக்கிறார்கள்.
எனவே தமிழகத்தில் பிஜேபி வலுவடை யும் வரை சி.டி ரவி தமிழக பிஜேபி பொறுப்பாளராக இருக்கவே வாய்ப்புகள் அதி கமாக இருக்கிறது. அதனால் சி.டி ரவிக்கு கர்நாடக முதல்வராகும் யோகம் இப்பொ
ழுது இல்லை என்றே கூறலாம். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் லிங்காயத்தான எடீயூர
ப்பாவை தூக்கி விட்டு லிங்காயத்துத்துகளுக்கு எதிரான ஒக்கலிகர்களை முன்னிலைப்படுத்த சதானந்த கவுடா என்ற ஒக்கலிகரை முதல்வராக்கிய அத்வானி கால முட்டாள்த்தனமான அரசியலை இப்
பொழுது உள்ள மோடி அமித்ஷா நிச்சய மாக செய்ய மாட்டார்கள்.
அதனால் லிங்காயத்து ஒக்கலிகர் இல்லாத பிராமணரான பிரகலாத் ஜோஷி யை முதல்வராக கொண்டு வரும் பொழுது எடியூரப்பாவை நீக்குவதால் லிங்காயத்துக்களிடையே அதிருப்தி உருவானலும் அது பிஜேபி எதிர்ப்பு அரசியலாக மாறாது. மாறாக ஒக்கலிகரை முதல்வராக கொண்டு வந்தால் லிங்காயத்துக்கள்பிஜேபி எதிர்ப்பு அரசியலுக்கு சென்றுவிடுவார்கள்.எனவே லிங்காயத்து ஒக்கலிகர் இன அரசியல் இல்லாமல் பிராமணரான பிரகலாத் ஜோஷி எடியூரப்பா ராஜினாமா செய்தபிறகு இந்த புகைப்படத்தில் உள்ளது மாதிரியே கர்நாடகாவில் முதலவராக வரலாம்.