உச்சநீதிமன்றத்தின் கிளைகளாக சென்னை, மும்பை, கல்கத்தா என மூன்று இடங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து உச்சநீதிமன்றம் டெல்லியில் மட்டுமே இயங்கி வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள உயர்நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளில் திருப்தி இல்லாதவர்கள் கடைசியாக நாடுவது உச்சநீதிமன்றத்தைத்
தான் அதுவும் வசதி படைத்தவர்கள் மட்டுமே டெல்லிக்குச் சென்று முறையிட்டு வாதிட்டு வந்தனர். எத்தனையோ ஏழை எளியவர்கள் டெல்லிக்கு சென்று வழக்குகளை நடத்த முடியாமலும், வழிவகை தெரியாமலும் பாதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே தமிழ் நாட்டில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வந்ததால் சென்னைக்கு வந்து வழக்கு நடத்த இயலாதவர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. அதேபோல் தற்போது உச்சநீதிமன்றத்தின் கிளைகளாக சென்னை, மும்பை, கல்கத்தா என மூன்று இடங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் சென்னையில் உச்சநீதிமன்றம் வருவதால் தென்மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை வருவதால் தமிழக மக்களுக்கு மட்டுமல்லாது தென்மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாகவே கருதப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்த பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும் தமிழக வழக்கறிஞர்களும், தமிழக மக்களும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.