தற்காலிக சபாநாயகர் ஆக்கப்பட்ட ஆ.ராசா பேசவிடாமல் அமளியில் ஈட்டுப்பட்ட திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள்.

தி.மு.க கட்சியின் மூத்த தலைவரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா அவர்கள் நேற்றைய தினம் தற்காலிக சபாநாயகராக இருந்தார். ஆனால் அவரை தி.மு.க-வின் தோழமை கட்சியை சேர்ந்த தோழர்கள் பேச விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29இல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் 26 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நவம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவரை தி.மு.க-வின் தோழமை கட்சியை சேர்ந்த தோழர்கள் பேச விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version