கடத்தல் நாயகன் பினராயி விஜயன் பதவி விலகு ! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி போராட்டம்!

துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளும், மத்திய புலனாய்வு பிரிவும் விசாரணையை துவக்கியுள்ளன. இந்த நிலையில் தங்க கடத்தல் வழக்கில் பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி சார்பில் கோழிக்கோட்டில் போராட்டம் நடைபெற்றது.

திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக் கு உணவுப் பொருட்கள் என்ற பெயலில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. அண்டை நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடுவதில்லை. இந்த நிலையில் அவ்வாறு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது. இந்த கடத்தலில் கேரளாவில் மக்கள் தொடர்பு அலுவலராக தூதரகத்தில் பணியாற்றி வந்த சரித் என்பவருக்கும் தொடர்பு உள்ளது.

மேலும் தூதரகத்தில் நிர்வாகச் செயலாளராக இருந்த ஸ்வப்னா என்பவரும் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஸ்வப்னா கேரள அரசின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொடர்பு துறைக்கும் செயலர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசின் முதன்மை செயலரிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.இந்த கடத்தலில் பினராயி ஆட்சி கவிழும் நிலைக்கு சென்றுள்ளது. பெண்களால் ஆட்சி கவிழ்வது கேரளாவில் வழக்கம் ஆகிவிட்டது.

ஸ்வப்னா சுரேஷ் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார். கேரள முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராக இருந்தவருக்கும், தங்கம் கடத்தலில் உதவிய பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதால், எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயனை நோக்கி போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இந்நிலையில், தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு இருப்பதால் முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி சார்பில் கோழிக்கோட்டில் திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கடத்தல் மன்னன் பினராய் விஜயன் பதவி விலகு என கோஷமிட்டுள்ளார்கள்.

அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் போலீஸ் தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் முன்னேறினர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version