மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது அதில் தலையிட விரும்பவில்லை ஆனால் மின்சாரத்தை கொடுக்கும் நிறுவனங்களுக்கு பணத்தைக் கொடுக்க வேண்டியது மாநில அரசாங்களே இதை வழங்கவில்லையெனில் மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடம் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதே சமயத்தில் வரைமுறையில்லாமல் விவசாயிகள் இலவச மின்சாரத்தை பெரும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. காரணம் மின்சார வாரியங்களும் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது இதனால் இந்த மாநிலங்கள் நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசின் உதவியை நாடியுள்ளன.
தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தரப்படுகிறது. நெசவு கைத்தறிக்கும் குறிப்பட்ட அளவு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் விவசாயத்திற்கு எவ்வளவு மின்சாரம் உபயோகிக்கப்படுகிறது என்பதை அறிய முடியாத வகையில் மீட்டர் பொருத்தப்படாமல் உள்ளது.மின்சாரத் திருத்தச் சட்டம் சொல்வது இரண்டே இரண்டு விஷயங்கள்தான்.
- விவசாயத்திற்கு பயன்படத்தப்படும் மின்சாரம் மீட்டர் பொருத்தப்பட்டு அளவீடு செய்யப்பட வேண்டும்.
- எந்த ஒருவரும் மின்சாரக் கட்டணம் செலுத்திதான் ஆக வேண்டும். அவர்களுக்கு மானியம் கொடுக்க விரும்பினால், மாநில அரசு அதை அவர்களின் வங்கிக் கணக்கில் அதைச் செலுத்த வேண்டும் (இப்போது கேஸ் மானியம் வழங்கப்படுவதுபோல).
மீட்டர் பொருத்தப்பட்டால் ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார் எனத் தெரிந்துவிடும்.தெரிந்தால் என்ன? பிரச்சனை இருக்கிறது. இப்போது வழங்கப்படும் இலவச மின்சாரம் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதுல்லை. அந்த இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி நீர் இறைத்து அதை காசுக்கு விற்கும் நிறைப்பேர் இருக்கின்றனர். வாய்க்கால்,ஆற்று நீரை பல நூறு HP கொண்டு முறைகேடாக திருடும் கும்பல் அதற்கும் இந்த இலவச மின்சாரம்தான்.
அது போக விவசாயம் சாரா விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பல ஆலைகள் கூட இந்த மின்சாரத்தில் இயங்குகின்றன.
மீட்டர் பொருத்தபடாததால் மின் ஊழியர்கள் யாரும் வயல்கள் பக்கம் வருவதே இல்லை. கண்காணிப்பு என்பது சுத்தமாக இல்லை. சட்டத்திற்குப் புறம்பான பல தொழில்களுக்கு கூட இந்த மின்சாரம்தான் பயன்படுத்தப்படுகிறது. எல்லா மின்சாரமும் விவசாயிகள் பயன்படுத்தப்பட்டது என்று கணக்கு காண்பிக்கப்படுகிறது. மீட்டர் என்று ஒன்று பொருத்தப்பட்டுவிட்டால் கண்காணிப்பு என்ற ஒன்று வந்துவிடும். இந்த அத்துமீறல் மின் பயன்பாட்டிற்குப் பிரச்சனை ஏற்படும்.
பொறுப்பற்ற முறையில் மோட்டாரையே நிறுத்தாமல் ஆட்டோமேட்டிக் ஸ்டார்டர் டைம்மர் பொருத்தப்பட்டு மின்சாரம் இருக்கும் போதெல்லாம் நிலத்தடி நீரை வீணடிக்கும் போக்கு, பயன்படுத்தாமலே பல வருடம் கிடக்கும் மின் இணைப்பு, சும்மா கொடுக்கிறார்கள் என்றும ஐந்து ஏக்கர் நிலத்திற்கு 10 HP சர்வீஸ் மூன்று நான்கு வாங்கி வைத்துக்கொள்வது என இதுபோல பல உண்டு.இவை யெல்லாம் தவிர்க்கப்படும்.
மேலும் விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சார இணைப்பிற்கு
1.வைப்பு தொகையில்லா திட்டம்.
2.சுயநிதி திட்டம்1,2 என உள்ளது.
ஆனால் முறையே இருபது ஆண்டுகள் மற்றும் பத்து ஆண்டுகளாக மின் இணைப்பே கொடுக்க ப்படவில்லை.காரணம் முறைகேடு, வருமான இழப்பு ஆகியவையே. ஏழை மக்களுக்கு தொகுப்பு வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு விளக்கு மட்டுமே இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் திட்டம். ஆனால் திட்டத்தின் இன்றைய நிலை மின்சார அடுப்பு, மிக்ஸி, பிரிட்ஜ், அகன்ற டிவி என முறைகேடுகள்.
கைத்தறி நெசவளார்கள் என்ற பெயரில் ஒரு நபர் சொசைட்டியில் பதிவு செய்திருந்தால் போதும் அவருக்கு இலவச மின்சாரம் உண்டு. ஆனால் இதில் பெரும்பாலனவர்கள் நெசவே செய்வதில்லை.இப்படி அனைத்து அனைத்து தொழில் செய்வோரும், அனைத்து வகுப்பினரும் தவறு செய்கின்றனர்.
இவற்றுக்கு எல்லாம் ஒரே தீர்வு சூரிய ஒளி மின்சாரம். இதை விவசாயிகளுக்கு முழ மானியத்தில் மத்திய அரசு வழங்க வேண்டும். இதனால் மின் விநியோகம் செய்வது போன்ற பிரச்சனை எல்லாம் வர வாய்ப்பில்லை. இந்த சூரிய ஒளி மின்சாரம் மூலம் ஒரு விவசாயிக்கு 10 மணி நேரம் மின்சாரம் இலவசமாக கிடைக்கும். இலவச மின்சாரத்தால் 24மணி நேரமும் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தடுக்கப்படும். என்னைப் பொருத்தமட்டில் 10மணி நேரமாவது விவசாயிகளூக்கு இலவச மின்சாரம் வழங்குவதை அரசாங்கங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















