இந்தியா தன் மிகபெரிய சாதனையினை செய்திருக்கின்றது, ஆம் மிக வரலாற்று சிறப்புமிக்க சாதனை இது தன் சொந்த விமானதாங்கி கப்பலை தயாரித்து அதை வெள்ளோட்டம் விட்டு உலகை அதிர வைத்திருக்கின்றது இந்தியா.
உலகில் வலுவான கப்பல்படைக்கு விமானம்தாங்கி கப்பல் அவசியம், இன்றும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகின்றது என்றால் அவர்களிடம் 11 விமானம் தாங்கி கப்பல் உண்டு ஐரோப்பிய நாடுகளெல்லாம் இவற்றை வைத்து கொண்டு மிரட்டும், ரஷ்யா ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பலை மட்டும் களத்தில் வைத்திருக்கின்றது.
ஆனால் மறைவாக சில இருக்கலாம் என்பது தியரி சீனாவும் சொந்த விமானந்தாங்கி கப்பலை கட்டியது, கப்பலும் ஓடியது ஆனால் விமானம் கப்பலில் ஏறி இறங்குவதை அவர்களால் செய்யமுடியவில்லை, விமானம் கப்பலில் இறக்கி ஏற்றும் பொழுது திணறினார்கள் இப்பொழுது சிக்கலில்தான் உள்ளார்கள்.
காரணம் விமானம் ஏறி இறங்கா கப்பல் பருத்தி மூட்டைகளை சுமக்கத்தான் சரி ஆயிரம் சிக்கல் நிரம்பியது விமானகப்பல் தயாரிப்பது, ஒவ்வொரு இன்ஞ் அளவும் முக்கியம் அதற்கான பிரத்யோக உலோகம் முக்கியம், முக்கியமாக தொழில்நுட்பமும் இன்னும் பலவும் மகா முக்கியம்.
அதைவிட முக்கியம் கடலில் கல் போட்டு தீவு அமைப்பது போல் பெரும் கால அளவு எடுக்கும் விஷயம் அது, கொட்டவேண்டிய பணம் ஏராளம்இதனாலேதான் ரஷ்யா கூட ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பலோடு நிறுத்தியிருக்கின்றது என்பார்கள், பிரிட்டனே நீண்ட நாள் கழித்து இப்பொழுதுதான் குயில் எலிசபெத் கப்பலை களமிறக்கியிருக்கின்றது.
இந்திய வரலாற்றில் 1960களில் ரஷ்யாவிடம் இருந்து தன் பழைய எஜமான் பிரிட்டனிடம் இருந்து ஒரு விமானம் தாங்கி கப்பலை வாங்கியது, அது 1940களில் தயாரிக்கபட்டது. அதை ஐ.என்.எஸ் விக்ராந்த் என பெயரிட்டு பயன்படுத்தியது, வங்கபோரில் இந்தியா வெற்றிபெற அந்த கப்பல்தான் முழுமையாக உதவியது காலவோட்டத்தில் அதற்கும் விடைகொடுக்க வேண்டியபொழுது இந்தியாவிடம் விமானம் தாங்கி கப்பல் இல்லாமல் போனது, ரஷ்யாவிடம் இருந்து பழைய கப்பலை வாங்க நினைத்தால் விலை அதிகம் அதன் வயதான ஆயுளும் குறைவு.
இந்நிலையில்தான் 1999ல் வாஜ்பாய் அரசு சொந்தமாக விமானம்தாங்கி கப்பலை தயாரிக்க முடிவெடுத்து கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு ஒப்பந்தம் கொடுத்தது.மெல்ல மெல்ல கப்பல் வளர்ந்தது, 2014ல் மோடி வந்தது முதல் மிகபெரிய கவனம் செலுத்தினார். மறைந்த மனோகர் பாரிக்கர் முதல் இன்றைய ராஜ்நாத்சிங் வரை சிறப்பு கவனம் செலுத்தினார்கள்.
கடும் உழைப்பில் உருவான அந்த விமானம் தாங்கி கப்பல் இப்பொழுது தயாராகி வந்துள்ளது. அதன் வெள்ளோட்டம் மிக இயல்பாக நடக்கின்றது, இக்கப்பல் கிட்டதட்ட 900 அடி நீளமுள்ளது ஆயிர்கணக்கான துருப்புகளை இதில் ஏற்ற முடியும் சுமார் 50 விமானங்களை வெடிபொருட்களுடனும் எரிபொருள் சப்ளையுடன் நிறுத்தமுடியும், இப்போதைக்கு மிக் 29கே ரக விமானமும் சில சுகோய் ரக விமானமும் பயன்படுத்தபடும் என்கின்றது செய்தி விமானம்தாங்கி கப்பல் என்பது மகாராணி போன்றது வெறுமையாக அதை மட்டும் பவனிக்கு அனுப்ப முடியாது
அதற்கு துணைகப்பலும் நீர்மூழ்கி பாதுகாப்பும் இன்னும் பலவும் அவசியம் இந்தியா ஏற்கனவே நாசகாரி ரக கப்பல்களை தயாரித்தது, சமீபத்தில் அரிகண்ட் போன்ற நீர்மூழ்கிகளையும் உருவாக்கியது இப்பொழுது சொந்தமாக விமானந்தாங்கி கப்பலை உருவாக்கி அசத்தியிருக்கின்றது, அரபு கடலில் நடக்கும் அதன் வெள்ளோட்டம் அக்கம் பக்கம் நாடுகளை அலற வைக்கின்றது.
தேசத்திற்கு மிகபெரிய பலம் சேர்க்க வேண்டும் என்ற வாஜ்பாயின் கனவினை நனவாக்கியிருக்கின்றது மோடி அரசு இந்நேரத்தில் 1998ல் போக்ரான் அணுகுண்டு வெடிப்பு தடைகளையும் தாண்டி துணிச்சலாக விமானம்தாங்கி கப்பல் கட்ட தொடங்கிய வாஜ்பாய் அவர்களை நன்றியோடு நினைத்தல் வேண்டும் அந்த தலைவன் கனவினை இந்த தலைவன் மோடி நிறைவேற்றியிருக்கின்றார்.
தேசம் வான்பலம் போலவே கடல்பலமும் பெற்று உலகில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது, காங்கிரஸ் ஆட்சியில் உலக நாடுகளிடம் பெரும் தொகையில் கப்பல் வாங்கிய தேசம் பாஜக ஆட்சியில் சொந்தமாக தயாரித்து அசத்துகின்றது’
தேசம் உலக அரங்கில் பெருமை கொள்கின்றது தேச பெருமகன் வாஜ்பாய்க்கும், மோடிக்கும் நன்றி செலுத்தும் நேரமிது, இதற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளையும் தேசம் நன்றியோடு வணங்குகின்றது இந்திய கடற்படையின் பெருமைமிகு பெயரான “விக்ராந்த்” எனும் பெயர் இந்த கப்பலுக்கும் சூட்டபட்டிருக்கின்றது.
லடாக் பனிமலையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா, மேலை கடலிலும் கப்பல் விட்டு அசத்துகின்றது
தேசத்து கவிஞன் பாரதியின் வாக்கு பலித்து கொண்டிருக்கின்றது “வெள்ளிபனிமலை மேல் உலவுவோம் அந்த மேலை கடல் முழுக்க கப்பல் விடுவோம்” என்ற அவன் வரிகளோடு கப்பல் சாகசத்தை ஆனந்த கண்ணீரோடு பார்த்து பெருமை கொள்கின்றது தேசம் வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்.!
எழுத்தாளர்:ஸ்டான்லி ராஜன் பதிவு
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















