ருத்ர தாண்டவம் பட வெளியீடு குறித்து அதிரடி அறிவிப்பைவெளியிட்ட ஹெச்.ராஜா! வரும் வரவைப்போம்!

பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச், ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ருத்ர தாண்டவம் படம் குறித்து பதிவிட்டுள்ள செய்தி தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது

மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின் 3 வைத்து படம் ருத்ர தாண்டவம்.

சில வருடங்களுக்கு முன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இதில் நாடக காதலை தோலுரித்து காட்டினார். இயக்குனர் மோகன் அவர்கள்.

திரெளபதி திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது, ஆனால் படம் வெற்றி அடைந்தது வணிகரீதியாகவும் இப்படம் வெற்றியைப் பெற்றது.

திரெளபதி திரைபடத்தில் நாடக காதல் பற்றி தோலுரித்த மோகன் அடுத்த படமாக . தற்போது ருத்ரதாண்டவம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எந்த விதமான சமூக பிரச்சனையை கையில் எடுப்பார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பை கிளப்பியது.

ருத்ரதாண்டவம் படத்தின் ட்ரைலர் 2021, ஆகஸ்ட் 24 வெளியானது! இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. நடிகர்கள் ரிஷி ரிச்சர்ட், ராதாரவி, தம்பி ராமையா மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ட்ரெய்லரில் போதை பொருட்களின் பழக்கத்தால் இளம் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் சிறுவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அதனை காவல்துறை அதிகாரியாக உள்ள ரிச்சட் அதனை தடுப்பதுபோல் உள்ளது. படத்தின் ட்ரைலர் இந்திய சட்டபடி மதம் மாறியவர்களுக்கு அதாவது சாதி உள்ள இந்துமதத்தில் இருந்து சாதியில்லா வேறு மதங்களுக்கு மாறினால் பல சலுகைகளும் சட்டங்களும் கிடையாது என்பதை சொல்லும் போல் தெரிகின்றது

பிசிஆர் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தொடர்பாக இந்தக் கதைக்களம் முழுவதும் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மதமாற்றம் குறித்தும், இந்து மதத்தை இழிவு செய்கிறார்கள் என்பது போன்ற அதிரடி வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

U / A சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் தமிழக உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா பெற்றுள்ளார். வெளிநாட்டு ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வாங்கியுள்ளது. ட்ரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.

பல்வேறு தரப்பு மக்களிடம் இந்த படத்தின் ட்ரைலர் வரவேற்பை பெற்றது. மேலும் வெளியான 18 மணிநேரத்தில் 1 மில்லியனுக்கும் மேல் பறவையாளர்களை கடந்துள்ளது. இது பெரிய ஸ்டார்களின் பட ட்ரைலர்களுக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் அமைத்துள்ளது. யு டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் ட்விட்டரில் இந்த படம் நிச்சியமாக தமிழ் நாட்டில் இது திரைக்கு வாரது. என ஒருவர் பதிவிட்டார். இதற்கு அதிரடியாக களத்தில் இறங்கிய பாஜக மூத்த தலைவர் ஹெச், ராஜா அவர்கள் வரும் வரவைப்போம் என பதிலளித்துள்ளது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Exit mobile version