தரமான செயல் செய்த அதானி குழுமம்.. செஸ் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர்.. எங்கப்பா அந்த சன் குழுமம்….

praggnanandhaa adani

praggnanandhaa adani

செஸ் உலகில் பிரபலமாக அறியப்படும் இளம் சிங்கம் பிரக்ஞானந்தா இந்தியாவின் செஸ் வீரர்களில் நம்பர் ஒன் வீரர் ஒருவர். செஸ் விளையாட்டின் வரலாற்றிலேயே இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் ஆன போது அவருக்கு 10 வயதுதான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது 12 ஆம் வயதில் 2018ஆம் ஆண்டில் அவர் உலகின் இரண்டாவது இளைய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

2022 ஆம் ஆண்டில், ஆன்லைன் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸில் பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோருக்குப் பிறகு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் ஆனார். உலக சாம்பியனை வீழ்த்திய மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

தனது 18 வயதில், பிரக்ஞானந்தா கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது இந்திய செஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

உலக செஸ் ரசிகர்கள் மத்தியில் மேக்னஸ் கார்ல்சன் என்றாலே ஒருவித புத்துணர்ச்சி பெருகிவிடும். அத்தகைய நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு முதல் இரண்டு சுற்றுகளையும் டிராவில் முடித்து கடும் சவாலை ஏற்படுத்தினார். மூன்றாவது சுற்றில் டை பிரேக்கர் மூலம் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார்.

இந்த நிலையில் தான் இந்தியாவின் அதானி குழுமத் தலைவரும், இந்தியாவின் டாப் தொழிலதிபருமான கௌதம் அதானி இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேற்று நேரில் சந்தித்தார். இந்தியாவின் பிரகாசமான சதுரங்க திறமையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் 18 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் வழங்க அதானி குழுமம் முடிவு செய்துள்ளது

இதன் பின்னர் கவுதம் அதானி கூறும்போது, “திறமையான பிரக்ஞானந்தாவை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம். விளையாட்டில் அவர் முன்னேறிய வேகம் மற்றும் செயல்திறன் குறிப்பிடத்தக்கது.

அவர், அனைத்து இந்தியர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதையும், மிக உயர்ந்த மட்டங்களில் பதக்கங்களை வெல்வதையும் விட உன்னதமானது எதுவும் இல்லை. இந்த பயணத்தில் விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதில் அதானிகுழுமம் முழு மனதுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுகிறது” என்றார்.

பிரக்ஞானந்தா கூறும்போது, “நமது நாடு உலக அரங்கில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். நான் விளையாடும் போதெல்லாம், தேசத்திற்கு அதிக விருதுகளை வெல்வதே எனது ஒரே நோக்கம். எனது திறனில் நம்பிக்கை வைத்துள்ள அதானி குழுமத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.

தமிழ் தமிழர்கள் என மார்தட்டி கொள்ளும் திமுக குடும்பத்தின் ஓர் அங்கமான சன் குழுமம் ஏன் ஒரு தமிழருக்கு ஸ்பான்சர் செய்ய முன்வரவில்லை.. கோடிகளை கொட்டி தரும் ஐ.பி.எல்லில் ஐதராபாத் அணியை வாங்கி சம்பாதிக்கும் சன் குழுமம் ஏன் உலக அளவில் தமிழருக்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தா விற்கு ஸ்பான்சர் செய்யவில்லை என நெட்டிசன்கள் கேள்வி கணைகளை தொடுத்து வருகிறார்கள்.

Exit mobile version