எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் – பன்னீர்செல்வம் அறிவிப்பு!

 அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்று வந்தது. இதனிடையே கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு 7-ம் தேதியான இன்று வெளியாகும் என தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படிஇன்று அறிவிப்பு வெளியாயிருக்கிறது. 

சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று அறிவிக்க உள்ளனர். இதையடுத்து அ.இ.அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு மற்றும் முதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இருவரையும் அமைச்சர்கள் நேற்று தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், உதயகுமார் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து கிளம்பி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று அவருடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லங்களில் விடியவிடிய நடைபெற்றது. இந்நிலையில் கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு

திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ்பாண்டியன், பா.மோகன். கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் மணிக்கம்.

Exit mobile version