அண்ணாமலையின் அதிரடி… வசமாக சிக்கும் டி.ஆர் பாலு…தோண்டப்பட்ட பழைய வழக்குகள்…

ANNAMALAI TRBALU

ANNAMALAI TRBALU

நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பேசிய டிஆர் பாலுக்கு பதிலளிக்க முற்பட்ட மத்திய அமைச்சர் எல்.முருகனை டிஆர் பாலு, நீங்க எம்பியாக இருக்க Unfit என டி.ஆர்.பாலு ஆணவத்தின் உச்சத்தில் பேசினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு ஆதரவாக உடனே மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால், பிரகலாத் ஜோஷி ஆகியோர் குரல் கொடுத்தனர். உச்சகட்டமாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஒரு தலித் அமைச்சரை எப்படி Unfit என சொல்லலாம்? ஒட்டுமொத்த தலித் சமூகத்தையே டிஆர் பாலு அவமானப்படுத்திவிட்டார் என கொதித்தெழுந்தார்கள். டி.ஆர் பாலு ஆணவத்தின் உச்சத்தில் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியது.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிஃட் ஆன அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலுவிடம் கேட்க விரும்புகிறேன். கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா? இல்லை ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் பிஃட் ஆன அமைச்சரா? இல்லை, பணக்காரர்களாக இருந்தால் பிஃட் ஆன அமைச்சரா? அமைச்சர் முருகனின் தாய் தந்தையர் நாமக்கல்லில் தோட்டத்து வேலை செய்து வருவதால், அவர் அன்பிஃட் அமைச்சரா? இல்லை அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்ததால் அன்பிஃட்டா? என்ற

எனவே, மத்திய இணையமைச்சர் முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள்அமைச்சர் எல. முருகன் அவர்களை குறித்து தவறாக பேசவில்லை. அவருடைய சமுதாயம் குறித்து தவறாக பேசியிருக்கிறீர்கள். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பட்டியலின சகோதர, சகோதரிகளை டி.ஆர்.பாலு தவறாக பேசியுள்ளார். ஒட்டுமொத்த அருந்ததிய சமுதாயத்தை தவறாக பேசியுள்ளார். எனவே, இதை எந்த காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் டி.ஆர்.பாலு எதை பேசினாலும், அண்ணாமலையோ, பா.ஜ.,வோ கைகட்டி கேட்க வேண்டும் என்றால், அது மிராசுதாரர்தனம். அவர் மிராசுதாரர் அல்ல. அவரிடம் வேலை பார்க்கும் கொத்தடிமை கூட்டம் நாங்கள் அல்ல.அடுத்து, ‘2ஜி ஊழல் பைல் ஒன்பதாவது டேப்’ வெளியான பின், டி.ஆர்.பாலு அரசியலில் இருக்கிறாரா என்பதை பார்ப்போம். என எச்சரிக்கை விடுத்தார் அண்ணாமலை.

இதுபோல் தான் முதலில் செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்தார் அண்ணாமலை அதன் பின் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றும் புழல் ஜெயிலில் இருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் ‘2ஜி ஊழலில் பாலு சிக்குவார் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேலையில் திமுக எம்.பி பாலுவின் பழைய வழக்குகளை தூசு தட்ட ஆரம்பித்துள்ளதாம் டெல்லி.

அதில் முக்கியமாக மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவின் மகன்களான டி.ஆர்.பி. செல்வக்குமார், கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தையும், டி.ஆர்.பி. ராஜ்குமார் கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களில் டி.ஆர்.பாலுவின் இரு மனைவியரான டி.ஆர்.பி பொற்கொடி, டி.ஆர்.பி. ரேணுகா தேவி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர்.

தனது மகன்களுக்குச் சொந்தமான மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் சலுகை விலையில், நரிமணம் மற்றும் குத்தாலத்திலிருந்து இயற்கை எரிவாயுவை சப்ளை செய்ய டி.ஆர்.பாலு ஓ.என்.ஜி.சி மற்றும் கெய்ல் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார் என்பதுதான்.அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள டி.ஆர்.பாலு மீது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 11, 12, 13 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அப்போது அனுமதி கேட்டுள்ளார் சுப்ரமணிய சுவாமி.

இதே போல் சேது சமுத்திர திட்டம் குறித்து தகவல்கள் டி.ஆர்.பாலு பேசிய உரையாடல்களையும் சேகரித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது, அதுமட்டுமில்லாமல் சாராய ஆலை முறைகேடுகள் குறித்தும் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதை மையமாக வைத்துதான் இனி வரும் காலங்களில் டி.ஆர்.பாலு அரசியலில் இருக்கிறாரா என்பதை பார்ப்போம். என கூறியிருக்கிறார்

மேலும் திமுக தரப்பிலும் அமைச்சர் எல்.முருகனை டி.ஆர்.பாலு விமர்சித்ததில் உடன்பாடு இல்லையாம்,முக ஸ்டாலினே கடுப்பாகி தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதெல்லாம் தேவையா எனவும் திமுகவிற்கு வேலை செய்யும் பென் நிறுவனமும் டி.ஆர்.பாலுவுக்கு எதிரான ரிப்போர்ட் தான் கொடுத்துள்ளதாம். இதன் காரணமாகவே இந்தமுறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை டி.ஆர்.பாலுவுக்கு கொடுக்க வாய்ப்பில்லை.அவரின் அரசியல் வாழ்க்கை இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும் என்கிறார்கள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை எதிர்ப்பதில் முழு மூச்சுடன் இயங்கி வருகிறார் செந்தில் பாலாஜியை தொடர்ந்து TR.பாலு வுக்கு கட்டம் காட்டியுள்ளார் என்கிறார்கள் கமலாலய வட்டாரங்கள்.

Exit mobile version