மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சமூக விரோதிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்-பாஜக மாவட்ட கலிவரதன்.

பிரதமரின் பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க கூடிய நிதியினை
விவசாயி இல்லாத நபரிடம் ஒரு நபருக்கு ரூ.1000 பணம் பெற்றுக்கொண்டு (கடவுச்சொல்லை திருடி வலைதளத்தில் பதிவேற்றம் செய்து மோசடி வேலையில் ஈடுபடும் கும்பல்) பயனாளிகள் பட்டியல் தயாரித்து கிராமங்கள் தோறும் ஒரு கும்பல் மோசடி ஊழல் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வருபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு பாரத பிரதமரின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் (பிஎம்.. கிசன்) பிரதமரின் விவசாயி திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணையாக ரூ. 6,000 நிதி உதவி விவசாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக செல்லும் வகையில் அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதை விட அவர்களுக்கு உதவி தொகையாக அளித்தால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் நிபுணர்களால் கூறப்பட்டதால் இந்த திட்டம் கடந்த 2019லிருந்து மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

தமிழகத்தில் வேளாண்மை துறை வட்டார அலுவலகங்களில் உள்ள சில அதிகாரிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் தகுதியான நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்காமல் – இந்த அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு புரோக்கர் வைத்துக் கொண்டு விவசாயியாக இல்லாத போலியான நபர்களிடம் இந்த ரூபாய்.6,000 பெற்றுத் தருவதாகக் கூறிக் கொண்டு – ஆதார்கார்டு .

வங்கிக் கணக்குப் புத்தகம் ஒவ்வொரு நபரிடமும் ஆயிரம் வீதம் பெற்றுக் கொண்டு பல கோடிக்கணக்கில் மோசடி வேலையில் இந்த சமூக விரோதிகள் (உடன்தையாக அதிகாரிகள்) ஈடுபட்டு வருகின்றனர்.

தகுதியான விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறவும் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுரண்டுகிற.

இந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version