Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் விதவைகள் அதிகரிக்க மது தான் காரணம் வெளிவந்தது அதிர்ச்சி ஆய்வறிக்கை

Oredesam by Oredesam
June 26, 2024
in செய்திகள், தமிழகம்
0
drink

drink

FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மது போதை காரணமாக கணவர்கள் இறப்பால் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைம்பெண்கள் ஆதரவற்ற நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மது போதை காரணமாக கணவர்கள் இறப்பால் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. பெண்கள் கைம்பெண்களாக மாறுவதற்கு என்ன காரணம், அவர்களின் பாதுகாப்பு, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்து ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கத்தினர் ஆய்வு நடத்தினர். சென்னை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இது குறித்து ‘லாஸ்’ LAAS மையம் நிர்வாகிகள் ராஜகுமாரி, ஆலாய்சஸ் இருதயம், பால் மைக்கேல்ராஜ், கைம்பெண்கள் ஆதரவற்ற நலச்சங்கம் தலைவர் அன்புச்செல்வி, துணைச் செயலாளர் சுதா, விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் கஸ்தூரி, ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வாழும் விதவைகளின் மொத்த எண்ணிக்கை 4.3 கோடி. இது நாட்டிலுள்ள மொத்தப் பெண்களது எண்ணிக்கையில் 7.3 சதவீதம் ஆகும்.

தமிழகத்தை பொறுத்தவரை, 2011-ம் ஆண்டு அடிப்படையில் வாழும் விதவைப் பெண்களின எண்ணிக்கை 38.56 லட்சமாக இருந்தது. இது தமிழகத்தில் வாழும் மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 10.7 சதவீதம். அப்படியானால், இப்புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் வாழும் விதவைகளின் எண்ணிக்கை தேசிய அளவை விட 3.4 சதவீதம் அதிகம். தற்போது தமிழகத்தில் 40 லட்சம் விதவைகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மதுபோதையில்தான் அதிகளவு கணவர்கள் இறந்துள்ளதாக அந்தப் பெண்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது. மிகப் பெரிய எண்ணிக்கையில் விதவைகள் நமது நாட்டில் வாழந்து வந்த போதிலும், அவர்களின் உள்ளார்ந்த துயர்களை நமது சமூகம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. பாரம்பரியம், மதப் பழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றின் பெயரால் அவர்கள் மீது இழைக்கப்டுபடுகின்ற பாகுபாடு மற்றும் வன்கொடுமைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

விதவைப் பெண்கள் மத்தியில் கடன் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. ஏறக்குறைய 85 சதவீதம் விதவைப் பெண்கள் கடனாளிகளாக இருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து குறைந்த வட்டி விகத்தத்தில் கடன் பெற்றிருக்கின்றனர். ஆனால் 50 சதவீதம் பேர் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களிடமிருந்து மிக அதிக வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருக்கின்றனர்.

விதவைகள் தங்களுக்கான வாழ்வாதார உரிமைகளைத் தேடிப் பெறுவது பெரும் சவாலாகவே உள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்ற விதவைகளில் 38.6 சதவீதம் பேர் மட்டுமே விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான ஆவணத்தை வைத்திருக்கின்றார்கள். விதவைகள் இத் திட்டத்தின கீழ் பயனடைவதைத் தடுக்கின்ற காரணிகள் லஞ்சம் மற்றும் விதவைகள் குறித்தான பாகுபாட்டுக் கண்ணோட்டம் என்று கூறுகின்றனர்.

கணவரின் இழப்பு விதவைகளின் வாழ்க்கையில் அழுத்தமான வாழ்வியல் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்க நேரிடும் சமூகப் புறக்கணிப்பு, தனிமை, மன உளைச்சல், கடன் சுமை, பாதுகாப்பின்மை ஆகியவை அவர்களைப் பெருளாதார மற்றும் உளவியல் சிக்கல்களுக்கு இட்டுச் செல்கின்றன.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஆன்மீக  வழிகாட்டுதலில் செயல்படுகிறாரா பிரதமர் மோடி வெளியான தகவல் !

ஆன்மீக வழிகாட்டுதலில் செயல்படுகிறாரா பிரதமர் மோடி வெளியான தகவல் !

April 17, 2020
குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுதலை இல்லை! தி.மு.கவிற்கு எதிராக திரும்பும் இஸ்லாமியர்கள்!

குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுதலை இல்லை! தி.மு.கவிற்கு எதிராக திரும்பும் இஸ்லாமியர்கள்!

November 26, 2021
மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!

மீண்டும் 2022 உ.பியில் யோகி! 2024 இந்தியாவில் மீண்டும் மோடி! அமித் ஷா சூளுரை!

October 30, 2021
அன்று மோடியாக டீ  விற்ற வாத் ரயில் நிலையம்! இன்று பிரதமர் மோடியாக புனரமைக்கப்பட்ட வாத் ரயில் நிலையத்தை  திறந்துவைத்தார்!

அன்று மோடியாக டீ விற்ற வாத் ரயில் நிலையம்! இன்று பிரதமர் மோடியாக புனரமைக்கப்பட்ட வாத் ரயில் நிலையத்தை திறந்துவைத்தார்!

July 17, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x