இரண்டாம் உலகபோர் காலத்தில் ஜப்பான் மேல் இருந்த கொலைவெறி கோபம் போலவே இப்பொழுது சீனா மேல் கொண்டிருக்கின்றது அமெரிக்கா.

அதற்காக அணுகுண்டை தூக்கி போட முடியாது, மிகபெரும் சக்தியான அமெரிக்கா சீனாவினை ஓசையின்றி முடக்கும் விஷயத்துக்கு வந்தாயிற்று. இந்த லேப்டாப் முதல் ஏகபட்ட அமெரிக்க தயாரிப்புகள் உலகில் உண்டு ஆனால் அவற்றின் உதிரி பாகங்கள் சீனாவில் செய்யபடும்

இப்பொழுது அமெரிக்கா முதல் அடியினை அங்கே அடிக்கின்றது, அதுவும் அதன் அடிபொடிகளும் சீனாவினை விட்டு கிளம்புகின்றன, இனி சீனாவில் வியாபாரம் செய்யும் கம்பெனிகளுக்கு அதிக வரி என மிரட்டுகின்றது அமெரிக்கா

அப்படியானால் அதே அளவு குறைந்த சம்பள உற்பத்திக்கு எங்கு செல்வோம் என அவை கண்ணை கசக்கும் பொழுது இந்தியா பக்கம் கண்ணை காட்டுகின்றது அமெரிக்கா..

என்னதான் ராகுலும், முக ஸ்டாலினும் மாறி மாறி குறை சொன்னாலும் இந்திய அரசு இவர்களை ஒரு பொருட்டாகவே கருதாமல் அதன் போக்கில் கடமையாற்றுகின்றது

சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க, தென்கொரிய, ஜப்பானிய கம்பெனிகள் இந்தியாவுக்கு வரலாம் எவ்வளவு நிலமும் வாய்ப்பும் நாங்கள் தருகின்றோம் என்கின்றது

அட்டகாசமான அழைப்பு இது

மாநில முதல்வர்களுக்கு இதுபற்றி மத்திய அரசு விளக்கி சொல்லி, வரும் கம்பெனிகளுக்கு நிலம் உட்பட எல்லா சலுகைகளையும் மாநிலங்கள் செய்யவேண்டும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கைக்கு மத்திய அரசு செல்லும் என எச்சரித்துவிட்டது

இதில் உபி அரசும், ஆந்திர அரசும் முந்திகொண்டு ஏகபட்ட கம்பெனிகளை வளைத்து போடுகின்றன, ஆந்திரா லட்சகணக்கான ஏக்கர் நிலத்தை கொடுத்துவிட்டது, உபி அரசு கடும் முன்னேற்பில் கம்பெனிகளை திருப்தி படுத்துகின்றன‌

கன்னட அரசும் தலைகீழாக நிற்கின்றது

சரி, இதில் தமிழக அரசு என்ன செய்கின்றது என கேட்க கூடாது, வரும் கம்பெனிகள் தானாக தங்கள் கதவை தட்டினால் “புன் சிரிப்புடன்” வரவேற்பார்கள்

ஆனால் மத்திய அரசு மூலம் வருவதால் ஊழல், கமிஷன் என எதுவும் சாத்தியமில்லை என்பதால் மாநில அரசு
ஆர்வம் காட்டவில்லை, இது மாநில துரோகம்

அமெரிக்கா , லண்டன் என பறந்து பறந்து தொழிலதிபர்களை சந்தித்த பழனிச்சாமி இப்போது இதில் ஆர்வமின்றி இருப்பது தமிழகத்து சாபம்

அவர்களுக்கென்ன? டாஸ்மாக் இருக்கின்றது, அதை திறந்துவிட்டால் வருமானம் கொட்டாதா?

ஆளும் கட்சிதான் சரியில்லை, எதிர்கட்சி திமுக ஏன் அமைதி?

எந்த நல்லதிட்டமும் மோடி காலத்தில் தமிழகத்துக்கு வந்துவிட கூடாது என்பதில் அவர்கள் தனி கவனத்தோடு இருக்கின்றார்கள், தமிழகம் எப்படி போனால் என்ன?

இந்த தமிழக பாஜக என்ன செய்கின்றது என்றால் கட்சியினை தேடிகொண்டிருக்கின்றது, காங்கிரஸ் இறந்தே விட்டது

ஆக உலக கம்பெனிகளெல்லாம் இந்தியாவில் கால்பதிக்க முயலும் போது, மற்ற மாநில அரசுகள் ஓடி ஓடி வாய்பளித்து தொழில்வளத்தை பெருக்க ஆர்வமாய் செயலாற்றும் போது, தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பும் எதிர்ப்புமாக காமெடி காட்சிகள் நடக்கின்றன‌

உலக நிலையினை கூட சொல்லவோ சிந்திக்கவோ யாருமில்லை, தமிழன் அப்பாவி பைத்தியம், தலைவர்கள் முழு சுயநலவாதிகள், பின் எப்படி

நிச்சயம் கொரோனா கொடியது, டாஸ்மாக் அதைவிட கொடியது, தமிழக அரசியல் அதை எல்லாம் விட மகா கொடியது!

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version