ராமர் கோயில் கட்டுவதை தடுக்கும் முயற்சி பலிக்காது அமித்ஷா அதிரடி !

உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதை தடுப்பதற்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாஜ சார்பில் நடந்த ஜன் விஸ்வாஸ் யாத்திரையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். யாத்திரையின்போது பொதுமக்களிடையே அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘சமாஜ்வாதி கட்சியின் அகராதியானது  குற்றம் மற்றும் தீவிரவாதம், சலுகை அளித்தல், ஊழல், கலவரங்கள் என தொடங்குகின்றது.

இவை அனைத்தையும் பாஜ அழித்துவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடந்தது. சமாஜ்வாதி தலைவருக்கு அப்போது வயிற்று கோளாறு ஏற்பட்டுவிட்டது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களது முழுபலத்தையும் செலவிட்டாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது’ என்றார்.

Exit mobile version