கொரோனா தடுப்பிற்காக டெல்லியில் களமிறங்கிய அமித்ஷா ! அப்பாடா ஆளை விட்டால் போதும் கெஜ்ரிவால் பெருமூச்சு !

கொரோனா விவகாரத்தில் டில்லி சொதப்பியதால், ஆரவாரமேதுமின்றி டில்லியின் கட்டுப்பாட்டை இன்று கையிலெடுத்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கொரோனா பிரச்சினை கைமீறி போய்விட்டதால் “ஆளை விட்டால் போதும்” என்ற நிலையில் கேஜ்ரிவால். எதிர்க்கவில்லை. ஆம் ஆத்மி, காங்கிரஸ், ஊடகம் என எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கள்ள மௌனம்.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால்,  அதை தடுப்பது குறித்து நேற்று  நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  கூட்டத்தைத் தொடர்ந்து , ”டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் கொரோனா பரிசோதனை இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும். அடுத்த ஆறு நாட்களில் இது மூன்று மடங்காக அதிகரிக்கப்படும்” என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் உத்தரவால், ரயில்வேயால் உருவாக்கப்பட்ட கொரோனா பெட்டிகள் (8,000 beds) தில்லிக்கு  பயன்படுத்தபட உள்ளது . அதிகப்படியான அரசு அதிகாரிகளும், மருத்துவ பணியாளர்களும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே குஜராத்தில் கூடுதல் உதவி செய்து வந்தது மத்திய உள்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் என மத்திய உள்துறை கொரோனா கட்டுப்பாட்டில் நேரடியாக இறங்கலாம்.

Exit mobile version