அமித்ஷா அதிரடி உத்தரபிரதேச பாணியில் பீகார் தேர்தல் களம்.

உத்தரபிரதேச தேர்தல் மாதிரியே பீகார் தேர்தலிலும் அமித்ஷாவின் சித்து விளையாட்டுகள் ஆரம்பமாகி விட்டன என்றே கூறலாம். பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை பல முனை போட்டிக்களால் சிதறடிப்பது
மூலமாக கடந்த 2017 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஜேபி க்கு கிடைத்த மாபெரும் வெற்றி மாதிரி பீகாரிலும் கிடைக்க அமித்ஷா வியூகங்கள் வகுத்து இருக்கிறார்.

இதில் முக்கியமாக யாதவ தலித் முஸ்லி ம் ஓட்டுக்களைசிதறடிக்க பப்பு யாதவ் தலைமையில் பிராகரசிவ் டெமாக்ரடிக் அலையன்ஸ் என்கிற பெயரில் பப்பு யாதவின் ஜன் அதிகார் கட்சி பீம் ஆர்மி என்
கிற தலித் அமைப்பை வைத்துள்ள சந்திரசேகர ஆசாத்தின் ஆசாத் பகுஜன் சமாஜ் கட்சி முஸ்லிம் அடிப்படை வாத அமைப்பா ன எஸ்டிபிஐ அடுத்து இன்னொரு தலித் கட்சியான பகுஜன் முக்தி கட்சி ஆகிய
கட்சிகள் உள்ளன.

அடுத்து அசாதுதீன் உவைசியும் தனியா க யுனைடெட் டெமாக்ரடிக் செக்யூலர் அலையன்ஸ் என்கிற பெயரில் ஒரு கூட்டணி அமைத்து இருக்கிறார் அதில் அசாதுதீன் உவைசி யின் அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லீமன் கட்சியும் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் சமாஜ்வாடி ஜனதா தளம் கட்சியும் கூட்ட ணி அமைத்து போட்டியிடுகின்றன

பீகாரில் சுமார் 18 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 சட்டமன்ற தொகுதிகளின் முடிவை முஸ்லிம் களின்
ஓட்டுகள் தான் தீர்மானிக்கும் நிலையில் அசாதுதீன் உவைசி தன்னுடைய கட்சி யை அந்த 50 தொகுதிகளிலும் போட்டி யிட வைத்து இருக்கிறார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்ட ணிக்கு வர வேண்டிய யாதவ தலித் மு ஸ்லிம் ஓட்டுக்களை சிதறடிக்கும் வகை யில்பப்பு யாதவ் கூட்டணியும் அசாதுதீன் உவைசியின் கூட்டணியும் இருப்பதால்
ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்
டணியை விட அதிக பலம் வாய்ந்த பிஜே பி ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு வெற்றி சுலபமாகி விட்டது.

இருந்தாலும் அமித்ஷா விட வில்லை. ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து இன்னும் சில கட்சிகளை வெளி
யேற வைத்து விட்டார். இவற்றில் முக்கிய
மான கட்சிகள் முன்னாள் மத்திய அமை ச்சரான உபேந்திரா குஷவாகாவின் ரா ஷ்டிரிய லோக் சமதா கட்சியும் முன்னாள் பீகார் முதலமைச்சர் மாஞ்சியின் ஹிந்து ஸ்தான் அவாமி மோர்ச்சா மற்றும் முகேஷ்சகானியின் விஐபி கட்சியும் மிக மு க்கியமானவை.

இதில் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி கட்சி பிஜேபி கூட்டணிக்கு வந்து விட்டது.பீகார் மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் மகாதலித்கள் தான் இருக்கி றார்கள்.ராம்விலாஸ் பஸ்வானின் பஸ்
வான் தலித்களை விட மாஞ்சியின் மு ஷாகர் என்கிற மகா தலித்கள் தான் பீகாரில் அதிகம் என்பதால் ராம் விலாஸ் பஸ்
வானின் லோக்ஜன சக்தி பிஜேபி கூட்ட ணியில் இருந்து வெளியேறினாலும் பிஜேபி கூட்டணிக்கு வெற்றி உறுதி என்று
அமித்ஷா நினைக்கிறார்.

அடுத்து உபேந்திரா குஷவாகாவின் ரா ஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கு கொரி என்கிற ஓபிசிமக்களிடம் ஓரளவு செல்வா
க்கு உண்டு. பீகாரில் 11 சதவீதம் உள்ள யாதவர்களுக்கு அடுத்து இந்த கொரி இன மக்கள் தான் அதிகமாக 7 சதவீதம் அளவில் இருக்கிறார்கள்.

இந்த ராஷ்டிரிய லோக் சமதா கட்சியுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஜன்வாடி சோசலிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து இருக்கின்றன. இதில் விஐபி கட்சியும் இணைய இருக்கிறது.

முகேஸ் சஹானி தலைமியிலான விஐபி கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி 243 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி யிடுவதாக அறிவித்து இருக்கிறது.

அதென்னப்பா விஜபி கட்சி என்று கேட்கி
றீர்களா..விகாஷீன் இன்சான் பார்ட்டி என்
பதன் சுருக்கமே விஐபி கட்சியாகும்.அதா
வது மல்லாஹ் என்று அழைக்கப்படும் மீனவர் களின் அரசியல் கட்சியாகும்.

மல்லாஹ் இனம் உத்தர பிரதேசத்தில் உள்ள நிஷாத்கள் மாதிரி பீகாரில் உள்ள ஒரு வலிமையான இனமாகும். மல்லாஹ்
நிஷாத்கள் வேறு யாருமில்லை.நம்முடை ய ராம பிரான் கங்கையில் பயணிக்கும் பொழுது அவருக்கு படகு ஒட்டிய குகன்
வழியில் வந்த இனத்தை சேர்ந்தவர்கள்.

இந்த கட்சியின் தலைவர் முகேஸ் சஹா னி பாலிவுட் சினிமா தயாரிப்பாளர்.. பா ர்டா..ஒரு மீனவ குடும்பத்தைச் சேர்ந்த
முகேஸ் சஹானி பாலிவுட் சினிமா தயாரிப்பளாராக உயர்ந்தது பெரிய விசயம் தான்.

இந்த சினிமா தயாரிப்பாளர் என்கிற அ டையாளத்தை வைத்துக்கொண்டு முகேஷ் சஹானி மீனவ நண்பனாக அவதாரம்
எடுத்து தனிக்கட்சி ஆரம்பித்து பீகார் அ ரசியலில் வலம் வந்துக்கொண்டு இரு க்கிறார். இவரும் தனிக்கூட்டணி காண
இருக்கிறார்.

எப்படி உத்தரபிரதேச தேர்தலில் பிஜேபி எதிர்ப்பு தலித் முஸ்லிம் மீனவ வாக்குகளை பல கூட்டணிகளை உருவாக்கி சிதற வைத்து மாபெரும் வெற்றியை பிஜேபிக்கு கிடைக்க வைத்தாரோ அதே மாதிரி
ஒரு பார்முலாவை கையில் எடுத்து பீகார் தேர்தலிலும் பிஜேபி கூட்டணிக்கு மாபெ ரும் வெற்றியை அளிக்க இருக்கிறார் சாணக்கியர் அமித்ஷா.

Exit mobile version