அமித்ஷாவின் ஒரே கல்லில் விழுந்த இரண்டு மாங்காய்.

நான் கடந்த வாரம் நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலை முன்வைத்து அமித்ஷா
மத்திய பிரதேசத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க நினைக்கிறார் என்று கூறி இருந்தேன்.

அது இப்பொழுது நிஜமாகி கொண்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் ராஜினாமா செய்யும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

76 எம்எல்ஏக்களை தொட்டு விட்டால் அவர்களை கட்சி
தாவல் தடுப்பு சட்டம் ஒன்றும் செய்யாது.எம்எல்ஏ பதவியை இழக்கவும் வேண்டாம்.

ஆனால் இதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கம்மி தான் இருந்தாலும் வாய்ப்புகளும் இருக்கிறது. ஏனென்றால் பிஜேபி யின் டார்கெட்
மத்திய பிரதேசத்தில் இப்பொழுது நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் எப்படியும் தேர்தல் நடைபெற உள்ள 3 இடங்களையும்
முடிந்தால் கைப்பற்றிவிடவேண்டும் என்று முனைப்புடன் இருக்கிறது.

நேற்று வரை 3 ல் 1 எம்பியை மட்டுமே பெறமுடியும் என்கிற நிலை மாறி இப்பொழுது 2 இடங்களை பிஜேபியால் பெற முடியுகம் என்று மாறி இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் ஒரு ராஜ்யசபா எம்பியை பெற வேண்டும் என்றால் 59 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும்

இப்போதைய சட்டமன்றத்தில் பிஜேபிக்கு 107 எம்எல்ஏக்கள் தான் இருக்கிறார்கள்.

எனவே ஓரே ஒரு எம்பியை மட்டுமே பெற்ற முடியும்.ஆனால் இப்பொழுது மத்திய பிரதேசத்தில் பிஜேபியின் 2 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி முடிவடைவதால் 1 எம்பியை இழக்க வேண்டிய நிலையில் இருந்தது.

விட்டு விடுவாரா அமித்ஷா.. ஒரே ஒரு கல் எறிந்தார். மத்திய பிரதேச ஆட்சியும் கவிழ்ந்துவிட்டது. இன்னொரு ராஜ்யசபா எம்பியும்
உறுதியாகி விட்டது.இப்பொழுது 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டதால் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை114ல் இருந்து 90க்கும் குறைவாக வந்துவிட்டது.

எனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு எம்பி மட்டுமே கிடைக்க முடியும். ஆனால் பிஜேபி
114 எம்எல்ஏ க்களை வைத்து இருப்பதால் 2 எம்பியை உறுதியாக பெறமுடியும். ஆனாலும் அமித்ஷா விட மாட்டார். இன்னொரு 30 காங்கிரஸ் எம்எல்ஏக்களை பிஜேபிக்கு ஆதரவாக கொண்டு வந்து விடுவார்.

அப்படி ஒரு வேளை நடைமெற்றால் பிஜேபி மத்திய பிரதேசத்தில் நடைபெறும் ராஜ்ய சபா தேர்தலில் 3 இடங்களையும் கைப்பற்றி
விடும்.

இதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.ஐயோ பாவம் மத்திய பிரதேச த்தில் தான் பிரியங்கா ராஜ்யசபா தேர்தலில்
போட்டியிட இருந்தார். இனி அவ்வளவு தான்.

ஜோதிர் ஆதித்யா சிந்தியா என்கிற ஒரே ஒரு கல்லை எறிந்து மத்திய பிரதேசத்தில் பிஜேபி ஆட்சி மற்றும் 3 ராஜ்யசபா எம்பிக்கள் என்று
இரண்டு மாங்காய்களை விழ வைத்து விட்டார் அமித்ஷா..

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version