அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டு இருந்த அமித்ஷாவை நினைத்துஇனி அவரின் அதிரடி அவ்வளவு தான் என்று சந்தோசப்பட்டு வந்த அவரது எதிரிகளுக்கு இனிமா கொடுக்கும் வகையில்அவரை மேற்கு வங்காள தேர்தல் பொறுப்பாளராக அனுப்ப இருக்கிறது பிஜேபி.
மேற்கு வங்காள தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமித்ஷா துர்காபூஜைக்கு முன் கொல்கத்தா சென்று பொ றுப்பு எடுத்து கொள்ள இருக்கிறார்.
கடந்த வாரம் தான் பிஜேபியின் தேசியபொறுப்பாளர்களாக மேற்கு வங்காள த்தில் இருந்து மூன்று முக்கியமானவ ர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இப்பொ ழுது அமித்ஷா அவர்களும் மேற்கு வ ங்காள பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுஇருக்கிறார்..அனைவருக்கும் வாழ்த்துகள்..
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பிஜேபிக்கு வந்த முகுல்ராய் மற்றும் அனுபம் ஹஸ்ரா ஆகியோர்க்கு தேசிய அளவில் பொறுப்பு கள் வழங்கப்பட்டு இருப்பதன் மூலமாக பிஜேபி மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலைமிக தீவிரமாக எதிர்கொள்ள இருக்கிறதுbஎன்பதை அறிந்து கொள்ளலாம்.ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் வல து கரமாக இருந்து 2017ல் பிஜேபிக்கு வ ந்த முகுல்ராய்க்கு தேசியத்துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது
.இது சந்தோசமான விசயம் தான். ஏனென்றால் முகுல் ராய் பிஜேபிக்கு வந்தபிறகு தான் 2019 லோக்சபா தேர்தலில்பிஜேபிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றிகிடைத்துள்ளது.திரிணாமுல் காங்கிரசில் உள்ள அனை த்து தலைவர்களும் முகுல் ராயின் கட்டு ப்பாட்டில் இருந்தவர்கள் என்பதால் முகுல்ராய்க்கு தேசிய அளவில் அளிக்கப்பட்ட அங்கீகாரம் மூலமாக திரிணாமுல் காங் கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தமுடியும் என்று பிஜேபி நினைக்கிறது.முகுல் ராய் அவர்களால் நிச்சயமாக இதுமுடியும்.
2021 ஏப்ரலில் மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முகுல் ராயை தேசியத் துணை தலைவர் பதவிக்கு கொண்டு வந்ததன்மூலமாக மேற்கு வங்காளத்தில் பிஜேபி யின் ஆட்சி கனவு நினைவாகிறது.அதோடு இன்னொரு திரிணாமுல் காங்கிரஸ் வரவான அனுபம் ஹஸ்ராவுக்கு தேசிய செயலாளர் பதவியை வழங்கிஇருப்பதன் மூலமாக பிஜேபி மேற்கு வங்காள தேர்தல் வெற்றியை மிக சீரியசாக எதிர் கொள்ள விரும்புகிறது என்றுபுரிந்து கொள்ளலாம்.
ஏனென்றால் மாற்றுக் கட்சியில் இருந்துவந்தவர்கள் மாநில அளவில் பதவியை பெற முடியுமே தவிர தேசிய அளவில் பதவியை பெற முடியாது. பிஜேபியின்சித்தாந்த அரசியலில் ஆணி வேராக இருந்தவர்கள் மட்டுமே தேசிய அளவில் பத விகளை பெற முடியும்.இந்த நடைமுறையை இப்பொழுது பிஜே பி தகர்த்து மாற்று கட்சியில் இருந்து தேசிய அளவில் பதவிகளை அளித்து இரு ப்பதன் மூலமாக தேர்தல் வெற்றிக்காக கொள்கையை ஓரம் கட்டி வைப்பது ஒன்றும் தவறு அல்ல என்று நினைக்கிறது.
அண்ணன் ஹெச் ராஜா மாதிரியே மேற்கு வங்காள பிஜேபியின் அடையாளமாகஅறியப்பட்ட ராகுல் சின்ஹாவிடம் இரு ந்த தேசிய செயலாளர் பதவி பறிக்கப்ப ட்டு 2019 மார்ச் மாதத்தில் அதாவது கடந்த லோக்சபா தேர்தலுக்கு 2 மாதங்களு க்கு முன்பாக திரிணாமுல் கட்சியில் இருந்து பிஜேபிக்கு வந்த அனுபம் ஹஸ்ராவுக்கு அளிக்கப் பட்டு இருக்கிறது.ராகுல் சின்ஹாவின் தேசிய செயளாலர் பதவியை திரிணாமுல் காங்கிரசில் இருந்து வந்த அனுபம் ஹஸ்ராவுக்குஅளித்தது ஆச்சரியமான விசயம் தா ன் என்றாலும் அது இப்பொழுது தேவையாக இருக்கிறது.
ஏனென்றால் அனுபம் ஹஸ்ரா மேற்கு வங்காளம் முழுவதும் அறியப்பட்ட ஒரு அறிவு ஜீவி.மம்தா பானர்ஜியின் இடது கரமாக இருந்தவர். திரிணாமுல் காங்கி ரசி ல் இவருக்கு இப்பொழுதும் செல்வாக்கு உள்ளது.
இவரால் திரிணாமுல் காங்கிரசை தே ர்தல் நேரத்தில் உடைத்து ஆட்சியை பிடிக்கமுடியும் என்று பிஜேபி நினைத்து அவரை தேசிய செயலாளராக கொண்டு வந்து இருக்கிறார்கள் என்றே நினைக்கதோன்றுகிறது.அடுத்து மேற்கு வங்காளத்தில் டாரஜிலி ங் தொகுதி எம்பியான ராஜு பிஸ்தாவைதேசிய செய்தி தொடர்பாளராக கொண்டுவந்து இருக்கிறார்கள்.
இதுவும் ஒரு நல்லமுயற்சி தான்.ஏனென்றால் மேற்கு வங்க த்தின் டார்ஜிலிங் மலைப்புகுதிகளில்பிஜேபிக்கு ஏற்கனவே நல்ல செல்வாக்குஉண்டு.இங்கு கூர்க்காலாந்து தனி மாநில பிரச்சனை இருக்கிறது. பிஜேபியும் கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது.
ஆனால் இதுவரை அதை செயல் படுத்த எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்று பிஜேபிமீது டார்ஜிலிங் மலைப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.இதை சரிகட்ட கூர்க்காலாந்து பகுதியில்இருந்து டார்ஜிலிங் லோக் சபா தொகுதி யின் இளம் எம்பியாக உள்ள ராஜு பி ஸ்தாவை தேசிய செய்தி தொடர்பாளராகபிஜேபி கொண்டு வந்து இருக்கிறது.
ஆக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மம்தாவை வீழ்த்த அனைத்து வியூகங்களையும் வகுத்த பிறகு அதற்கு தலைமை தாங்க இந்தியாவின் எலெக்சன் மாஸ்டர்ஸ்டிரேடஜிஸ்ட் என்று அழைக்கப்படும் அமித்ஷா அவர்களை மேற்கு வங்காள தேர்தல் பொறுப்பாளராக நியமித்து அவரை மேற்கு வங்காளத்திற்கு அனுப்பி வைக்கிறது பிஜேபி.