அமித்ஷாவின் அடுத்த அதிரடி ! கோவாவில் மீண்டும் பிஜேபி ஆட்சி உறுதி !

கோவாவில் பிஜேபி ஆட்சி உறுதி ஒரு வழியாக கோவாவில் கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வந்து விட்டது. பிஜேபிகூட்டணி ஆட்சியில் இருந்த கோவா பார்வர்டு பார்ட்டி காங்கிரஸ் கூட்டணிக்கும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி,திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்று இருக்கிறது.

பாஜகவினரால் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸும் நியமித்து மீண்டும் கோவா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க அடுத்த அதிரடி காட்டியுள்ளார்.

சுமார் 50 வருடங்களாக கோவா அரசியலில் இருக்கும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி நேற்று கோவா அரசியலில் நுழைந்த திரிணாமுல் காங்கிரசுடன் கை கோர்த்து காங்கிரசை கதற வைத்து இருக்கிறது.மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி ஏற்கனவே சிவசேனாவுடன் கூட்டணி வைத்து இருப்பதால் கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சிவசேனா மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி இவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேரவாய்ப்புகள் இருக்கிறது.

இதனால் பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை இந்த கூட்டணி மிகப்பெரிய அளவில்பெற வாய்ப்புகள் இருக்கிறது.இந்த கூட்டணி அமையும் என்கிற எதிர்பார்ப்புடன் தான் பிஜேபி தன்னுடைய கூட்டணி அரசியல் எதிர் கட்சிகளான கோவா பார்வர்டு பார்ட்டியையும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டியையும் இப்பொழுது போய்ட்டு தேர்தல் முடிந்த பிறகு எம்எல்ஏக்களோடு வாங்க என்று அனுப்பி வைத்து இருக்கிறது பிஜேபிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட்டால் கோவாவில் பிஜேபி காலி என்கிற நிலையில் தன்னுடைய கூட்டணி அரசில் இருந்த 2 கட்சிகளையும் வெளியில் அனுப்பி அவற்றை காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் இணைய வைத்து.

பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை சிதற வைக்க பிஜேபி புத்திசாலித்தனமாக அரசியல் செய்கிறது.இதனால் 40 தொகுதிகளை உடைய கோவா சட்டமன்றத்தில் 20+ தொகுதிகள் இப்பொழுதே பிஜேபிக்கு உறுதியாகிவிட்டது.கடந்த 2017 கோவா சட்டமன்ற தேர்தலில் உண்டான குழப்பங்கள் மாதிரி இந்த தேர்தலில் நிகழாது.

தேர்தலுக்கு பிறகு பிஜேபி கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் கூட்டணியில் வெற்றி பெறும் கோவா பார்வர்டு பாரபார்ட்டி மற்றும் கோவா பார்வர்டு பார்ட்டியையும் மகாராஷ்டி ரா கோமந்தக் பார்ட்டியின் எம்எல்ஏக்களும் பிஜேபிக்கு திரும்ப வந்து விடுவார்கள் ஆக மனோகர் பாரிக்கர் இல்லாமல் நடைபெற இருக்கும் முதல் கோவா சட்டமன்ற தேர்தலில் பிஜேபி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்கிற நிலையே இருக்கிறது.

இதற்கான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள் கோவா முதல்வர் பிரமோத் சவாந்தும் கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸும்.இப்போதைய கோவா முதல்வர் பிரமோத் சவாந்த் இன்னொரு மனோகர் பாரிக்கராக கோவா அரசியலில் உருவெடுத்து இருக்கிறார்.கோவா தேர்தல் முடிந்த பிறகு கோவாவில் பிஜேபியின் தேர்தல் வெற்றிக்கு பொறுப்பாளராக இருந்த காரணத்தினால் அமித்ஷாவின் நம்பிக்குரிய தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பது உறுதி எனவும் கூறப்படுகிறது.

கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version